ஒரு கை, 2 கால்கள்.. பெண்ணின் தலை, உடலை தேடும் போலீஸ்.. போஸ்டர் அடித்து தீவிர வேட்டை
Recommended Video

சென்னை: ஒரே ஒரு கை, 2 கால்களை வைத்துகொண்டு இறந்த பெண்ணின் தலையை 5 நாட்களாக தேடி வருகிறார்கள் சென்னை போலீசார்.
பெருங்குடி குப்பை கிடங்கில் கடந்த 20-ம் தேதி ஒரு பெண்ணின் வலது கையும், 2 கால்களும் பார்சல் செய்யப்பட்டு குப்பையோடு குப்பையாக கிடந்தன.
குப்பையில் பிளாஸ்டிக் பொறுக்கும் சிலர் இந்த பார்சலை பார்த்து பயந்துபோய் பள்ளிக்கரணை போலீசில் இதை பற்றி சொல்லவும், அன்றிலிருந்தே விசாரணை ஆரம்பமானது. இறந்தவர் வசதியான வீட்டு பெண் என தெரிகிறது.

குப்பையில் பார்சல்
கிடைத்தது ஒரே ஒரு கை மட்டும்தான். அதில் 2 டேட்டூ குத்தியுள்ளார். ஒரு தங்க வளையல் போட்டுள்ளார். இதை வைத்துகொண்டுதான் போலீசார் விசாரணையை தொடங்கினர். கோடக்கம்பாக்கம் பகுதியிலிருந்து வந்த குப்பையில்தான் இந்த பார்சல் இருந்ததாம்.

60 பெண்கள்
அதனால் அந்த பகுதி உட்பட சென்னையில் காணாமல் போன பெண்கள் யார் என விவரங்களை சேகரித்தனர். அப்போதுதான் மொத்தம் 60 பெண்கள் காணாமல் போயிருப்பதாக இன்னொரு அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. அதனால் அவர்களை தேடும் பணி ஒரு பக்கம் நடந்து வருகிறது. இதனிடையே, 5 நாளாக தேடியும் பெண்ணின் தலை, உடம்பு கிடைக்கவே இல்லை.

தலை, உடல் மாயம்
கொலையாளிகள் எங்கே கொன்று தலையை, உடல்களை வீசியெறிந்தனர் என்றும் தெரியவில்லையாம். ஆனால் கை, கால்கள் துண்டு துண்டாக வெட்டி பார்சல் செய்யப்பட்டதை பார்த்தால், கை தேர்ந்த கசாப்புக்காரர்கள், அல்லது மருத்துவ துறையை சார்ந்தவர்கள், அல்லது மாபியா கும்பலை சார்ந்தவர்களாக கூட இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

3 தனிப்படைகள்
அந்த அளவுக்கு கனகச்சிதமாக பார்சல்கள் செய்யப்பட்டுள்ளதாம். கொலை செய்யப்பட்ட பெண் யாராக இருக்கக்கூடும் என்பதை கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. போஸ்டரும் அடித்து காவல்துறையினர் ஒட்டியுள்ளனர்.

பெரிய சவால்
இருப்பினும், பெண்ணின் தலையை 5 நாளாக போலீசார் தேடி கொண்டிருப்பதால் இது அவர்களுக்கு பெரும் சவாலாகவே உள்ளது. விரைவில் துப்பு துலங்கி உண்மையை வெளிக்கொண்டு வருவோம் என போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
சிதம்பரத்தில் ஷாக்! உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை கொன்ற முதியவர் கைது! -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications