ரூ 20 லட்சம் வாடகை பாக்கி! யுவன் சங்கர் ராஜாவை விசாரிக்கிறதா நுங்கம்பாக்கம் போலீஸ்!
சென்னை: வாடகை பாக்கி வைத்துள்ளதாக வீட்டு உரிமையாளர் அளித்த புகாரை அடுத்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிடம் விசாரணை நடத்த காவல் துறை முடிவு செய்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் யுவன் குடியிருந்த போது ரூ 20 லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்ததாக புகார் எழுந்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லேக் ஏரியாவில் ஒரு வீட்டில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா குடியிருந்தார். இந்த வீடு ஃபஸீலத்துல் ஜமீலா என்பவருக்கு சொந்தமானது. இந்த நிலையில் ஜமீலா காவல் துறையிடம் ஒரு புகாரை அளித்துள்ளார்.

அந்த புகாரில் தனது வீட்டில் குடியிருந்த யுவன் சங்கர் ராஜா ரூ 20 லட்சம் வாடகையை பாக்கி வைத்துள்ளதாகவும் தன்னிடம் எந்த தகவலையும் சொல்லாமல் வீட்டை யுவன் காலி செய்துவிட்டுச் சென்றதாகவும் அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தன்னை பற்றி அவதூறு பரப்பியதாக வீட்டின் உரிமையாளர் ஜமீலாவுக்கு யுவன் சங்கர் ராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் பல ஆண்டுகளாக பிரபல இசையமைப்பாளராக உள்ள தன்னை பற்றி அவதூறாக தொலைகாட்சி சேனல்களில் ஜமீலா பேட்டி அளித்துள்ளார்.
இது எனக்கு மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே தனக்கு ரூ 5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீட்டின் மாத வாடகை ரூ 1.20 லட்சம் என்றும் முன்பணம் ரூ 12 லட்சம் என ஒப்பந்தம் போடப்பட்டதாம்.
அண்மையில் இந்த வீட்டின் மாத வாடகை ரூ 1.50 லட்சமாக அதிகரிக்கப்பட்டதாம். இதையடுத்து 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் வரை ரூ 18 லட்சம் வாடகை தராமல் யுவன் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டதை அடுத்து 12 லட்சத்தை காசோலையாக யுவன் அனுப்பினாராம். அதன் பின்னர் ஓராண்டு வீட்டில் இருந்ததற்கான வாடகை பணத்தை தரவில்லையாம்.
இவர் வீட்டை காலி செய்த விஷயம் அருகில் இருந்தவர்கள் சொல்லியே உரிமையாளர் தரப்புக்கு தெரியவந்ததாம். 20 லட்சம் வாடகை கேட்டு போனில் தொடர்பு கொண்டாலும் யுவன் சரிவர பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர்.
அதில் யுவன் தரப்பு, ஜமீலாவுக்கு வாடகை கொடுக்காதது தெரியவந்துள்ளது. இதையடுத்து யுவன் சங்கர் ராஜாவிடம் போலீஸார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
-
பனை விவசாயியை எஸ்.ஐ இசக்கிராஜா சுட்ட வழக்கு.. சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்!












Click it and Unblock the Notifications