தப்பி ஓடிய மகா விஷ்ணு.. வெளிநாட்டில் தலைமறைவு! குறி வைக்கப்பட்ட இடம்.. அரே அவதாரத்திற்கு இந்த கதியா?
சென்னை: அசோக் நகர் அரசுப்பள்ளியில் பிற்போக்கு சொற்பொழிவு ஆற்றிய மகா விஷ்ணு தொடர்பாக வெளிநாடுகளில் விசாரணை நடத்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாம். இதற்காக வெளிநாட்டிற்கு ஒரு டீம் செல்லும் என்றும் தகவல்கள் வருகின்றன.
அசோக் நகர் அரசுப்பள்ளியில் பிற்போக்கு சொற்பொழிவு ஆற்றிய மகா விஷ்ணு என்பவருக்கு சொந்தமான திருப்பூர் குளத்துப் பாளையம் பகுதியில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளை மையத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சென்னையில் அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு தலைமறைவு ஆகி உள்ளார். திருப்பூரில் உள்ள அறக்கட்டளை அலுவலகத்திலும் மகாவிஷ்ணு இல்லை. தொடர்பு கொள்ள இயலாததால் தலைமறைவாகி இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

பல நாடுகளில் கிளைகளைக் கொண்ட பரம்பொருள் அறக்கட்டளையின் பின்னணி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. திருப்பூர் குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளையில் போலீசார், உளவுப் பிரிவினர் விசாரணை செய்து வருகின்றனர்.
சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவில் இதற்கு கிளை இருப்பது தெரியவந்துள்ளது. அறக்கட்டளையை நடத்தும் மகாவிஷ்ணு என்பவர் தற்போது ஆஸ்திரேலியாவில் இருப்பதாகவும், சில தினங்களில் இந்தியா வருவார் என்றும் கூறப்பட்டுள்ளது. மகா விஷ்ணுவின் பின்னணி, அறக்கட்டளையின் வருவாய் மற்றும் என்னென்ன பணிகளில் ஈடுபடுகிறது, எந்தெந்த பள்ளிகளில் என்னென்ன தலைப்புகளில் அவர் பேசியுள்ளார் என்ற பல கோணத்தில் விசாரணை நடக்கிறது/
மகா விஷ்ணு சைதாப்பேட்டை அரசுப் பள்ளியிலும் பேசிய விவகாரத்தில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சண்முக சுந்தரம், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். ஏற்கனவே, அசோக் நகர் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார்.
என்ன நடந்தது?: சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சிறப்பு விருந்தினர் மகாவிஷ்ணுவின் பேச்சு.. தமிழ்நாடு முழுக்க சர்ச்சையாகி உள்ளது. மூட நம்பிக்கையை தூண்டும் வகையில் பேசியது மட்டுமன்றி.. அரசு பள்ளி ஆசிரியரை அவமானப்படுத்தியதும் கண்டனங்களை சந்தித்து வருகிறது. மூடநம்பிக்கைப் பேச்சாளர் மகாவிஷ்ணுவை தமிழ்நாடு முழுக்க மக்கள் பலரும் கண்டித்து வருகின்றனர்.
சென்னை அசோக்நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி என்ற பெயரில் மகாவிஷ்ணு எனும் பேச்சாளரை அழைத்து வந்து பேச வைத்துள்ளனர். இதில்தான் அவர் மூடநம்பிக்கையை தூண்டும் வகையில் பேசி உள்ளார். அதோடு அங்கே இருந்த பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவரையும் அவமானப்படுத்தி உள்ளார்.
இவரை மேடையிலேயே சங்கர் என்ற ஆசிரியர் ஒருவர் மட்டும் எதிர்த்து பேசிய சம்பவமும் கவனம் பெற்றுள்ளது. சங்கர் என்ற இந்த பார்வையற்ற ஆசிரியரைஅங்கேயே மகா விஷ்ணு கிண்டல் செய்யும் வகையில் அவமானப்படுத்தி உள்ளார்.. சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சிறப்பு விருந்தினரை எதிர்த்து குரல் கொடுத்த ஆசிரியர் சங்கர் தமிழ்நாடு முழுக்க பாராட்டுகளை பெற்று வருகிறார். இன்று ஆசிரியர் சங்கருக்கு சால்வை அணிவித்து மேடையில் அமரவைத்து அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
புகார்: சர்ச்சைக்குரிய வகையில் பள்ளியில் பேசிய மகாவிஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். முன்ஜென்ம பாவ, புண்ணியத்தால்தான் மாற்றுத்திறனாளிகளாக பிறக்கிறார்கள் என அவர் பேசியது எங்களுக்கு எதிரான வன்செயலாக கருதுகிறோம் என்று இந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
பணியிட மாற்றம்: பள்ளியில் பிற்போக்குத்தனமான சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்த விவகாரத்தில் அரசு முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்விவகாரத்தில் விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
என் ஏரியாவுக்குள்ள வந்து என்னுடைய ஆசிரியரை அவமானப்படுத்திட்டு போயிருக்க.. உன்னை அவ்வளவு சீக்கிரம் சும்மா விடமாட்டேன் என்று அந்த மூடநம்பிக்கைப் பேச்சாளர் மகாவிஷ்ணுவை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்து உள்ளார். உன்னை சும்மா விட மாட்டேன் என்று எச்சரித்துள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications