காங்கிரஸ் மா.செ. புகாருக்கே இந்த நிலைமையா? கடிதத்தை பகிர்ந்து போலீஸ் மீது பாய்ந்த அண்ணாமலை
சென்னை: நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கடந்த 30 ஆம் தேதியே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார் அளித்திருந்த நிலையில், அவரது புகாருக்கே, திமுக ஆட்சியில் இதுதான் நிலைமை என்றால், சாமானிய மக்கள் எதிர்கொள்ளும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு குறித்த கேள்வி பலமாக எழுகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங். காங்கிரஸ் கட்சியில் பல ஆண்டுகளாக உறுப்பினராக இருந்த ஜெயக்குமார் தனசிங், மாவட்ட தலைவராக 7 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்து இருக்கிறார். திசையன்விளை சுற்று வட்டார பகுதியில் பிரபலமான தொழில் அதிபராகவும் அறியப்படுகிறார்.

இந்த நிலையில், கடந்த 30 ஆம் தேதி அன்று, ஜெயக்குமார் தனசிங், தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், முன் விரோதம் காரணமாக தன்னை கொலை செய்ய பலர் நோட்டமிடுவதாகவும் கடிதம் ஒன்றை எழுதி வைத்து இருந்து இருக்கிறார். அந்த கடிதத்தை நெல்லை மாவட்ட கண்காணிப்பாளரிடம் கொடுக்க ஜெயக்குமார் திட்டமிட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலையில் ஜெயக்குமார் தனசிங்கை காணவில்லை என அவரது மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று மதியம் உவரி அருகே கரைசுத்து புதூரில் உள்ள தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் ஜெயக்குமார் தனசிங் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மர்மமான முறையில் ஜெயக்குமார் தனசிங் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மரணம் பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது. ஒரு வாரத்துக்கு முன்பே மரண வாக்குமூலம் என குறிப்பிட்டு நாங்குநேரி MLA மற்றும் கள்ளிக்குளத்தை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்த்ராஜ் ஆகியோர் பெயரை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதால் ஜெயக்குமார் தனசிங் மரணம் கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை என்றால் அரசியல் காரணமாக அல்லது தொழில் போட்டியா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் அளித்த புகாருக்கே, திமுக ஆட்சியில் இதுதான் நிலைமை என்றால், சாமானிய மக்கள் எதிர்கொள்ளும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு குறித்த கேள்வி பலமாக எழுகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை கூறியிருப்பதாவது:- காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின், நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் திரு. ஜெயக்குமார் அவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. கடந்த ஏப்ரல் 30 அன்றே, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக திரு.ஜெயக்குமார் அவர்கள் புகார் அளித்திருப்பதாகத் தெரிகிறது.
குறிப்பாக, நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் திரு.தங்கபாலு உள்ளிட்டவர்கள் பெயர்களை, அந்தப் புகார்க் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனாலும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவரின் புகாருக்கே, திமுக ஆட்சியில் இதுதான் நிலைமை என்றால், சாமானிய பொதுமக்கள் எதிர்கொள்ளும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு குறித்த கேள்வி பலமாக எழுகிறது. உடனடியாக, மறைந்த காங்கிரஸ் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் திரு. ஜெயக்குமார் அவர்கள் புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications