முகம் பார்க்க நானும்.. முடியாமல் நீயும்.. ஆஹா அதிகாரி.. சர்ச்சை டிக்டாக்!

டிக்-டாக் ஆப்பில் போலீஸ் அதிகாரி ஒருவர் பாட்டு பாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: "முகம் பார்க்க நானும்.. முடியாமல் நீயும்" என்ற பாடலுக்கு வாயசைத்து கலக்கி பாடிய ஒரு போலீஸ் அதிகாரியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொஞ்ச நாளாகவே டிக்-டாக் என்னும் ஆப் இணையத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. பெண்கள் உட்பட எல்லா இளைஞர்களும் அதிகமாகவே பயன்படுத்தி வருகிறார்கள்.

கலைதாகம் கொண்டவர்கள் யாராக இருந்தாலும் ஆடுகிறார்கள், பாடுகிறார்கள் என்பதால் இதனுடைய பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு அதிகமாகி கொண்டே போகிறது.

கரடுமுறை, விறைப்பு?

கரடுமுறை, விறைப்பு?

இந்த ஆப்பில்தான் போலீஸ் அதிகாரி ஒருவர் பாட்டு பாடி உள்ளார். இவர் பெயர் சோமசுந்தரம். சென்னை மவுண்ட் ஆயுதப்படை துணை ஆணையராக பணியாற்றி வருகிறார். போலீஸ் என்றாலே கரட்டுமுரடு, விறைப்பு என்ற விமர்சனத்தை எல்லாம் இவர் பாட்டு பாடியே நொறுக்கி விட்டார்.

பின்னியெடுக்கிறார்

ஒரு வீடியோவில் முகம் பார்க்க நானும்.. முடியாமல் நீயும் என்ற பாடலுக்கு லிப் மூவ்மெண்ட் தந்துள்ளார். இன்னொரு வீடியோவில் ஒரு திரைப்பட வசனத்துக்கும் வாயசைத்துள்ளார். இரண்டு வீடியோவிலும் சோமசுந்தரம் நடிப்பில் பின்னியெடுத்துள்ளார்.

காதல், நடிப்பு

காதல், நடிப்பு

காதல் பாடலாகட்டும், அழுகிற காட்சியாகட்டும், இரண்டையுமே இந்த வீடியோவில் நன்றாக செய்திருக்கிறார் அதிகாரி. ஆனால் டிக்-டாக் ஆப்பில் ஒரு இப்படி போலீஸ்காரர் பாடுவதற்கும், குறிப்பாக யூனிபார்ம் இல்லாமல் ஆப்பில் வீடியோக்களை வெளியிடுவதற்கு சர்ச்சைக்குரிய விமர்சனங்கள் எழுந்துள்ளது.

யோகா பயிற்சி

ஆனால் போலீஸ் அதிகாரியின் இந்த முயற்சி முற்றிலும் பாராட்டத்தக்கது. உரிய விடுமுறை கிடைக்காமல், நிறைய மன உளைச்சலில் தற்போது எண்ணற்ற போலீசார் பணியாற்றி வருகிறார்கள். பலரை அது தற்கொலை வரை சென்று விட்டுவிடுகிறது. தமிழக அரசும் போலீசாரின் மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சியையும் ஊக்குவித்து வருகிறது.

மன அழுத்தம்

மன அழுத்தம்

இந்நிலையில் தங்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட தாங்களே இதுபோன்றதொரு யுக்தியை கையாளுவது சிறப்பு வாய்ந்ததே. கலையை ரசிக்க எந்த தடையும் யாருக்கும் எப்போதும் கிடையாது. அதே சமயத்தில் மன அழுத்தத்தில் சிக்கி தவிக்கும் எண்ணற்ற போலீசாருக்கு இந்த அதிகாரியின் டிக்-டாக் வீடியோக்கள் புதிய உத்வேகத்தைதான் தருவதாக இருக்கும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+