ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பா.. என்கவுண்டர் ஏன்? காவல்துறை அதிகாரி பரபர பேட்டி
சென்னை: சென்னையில் இன்று அதிகாலை ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டர் செய்யப்படார். இது குறித்து காவல் தெற்கு இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி தற்போது விளக்கம் அளித்தார். அப்போது ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் சம்பந்தம் இருப்பதாக எங்களது விசாரணையில் தெரியவரவில்லை என்று தெரிவித்தார்.
ரவுடி சீசிங் ராஜா இன்று காலை சென்னை நீலாங்கரை அருகே என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்ததாக சொல்லப்பட்ட சீசிங் ராஜா என்கவுண்டரில் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த என்கவுண்டர் நடைபெற்றது ஏன்? என்பது குறித்து காவல்துறை உயர் அதிகாரி சிபி சக்கரவர்த்தி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் அடுத்து பேட்டி வருமாறு:-

ஆந்திரவின் கடப்பா அருகே உள்ள ராஜம்பேட்டை பகுதியில் சீசிங் ராஜாவை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து வேளச்சேரி போலீசிடம் இரவு ஒப்படைக்கப்பட்டார். அவருக்கு எப்படி துப்பாக்கி கிடைத்தது என்பது குறித்து விசாரித்துவிட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்ய கேட்ட போது, நான் கூட்டிட்டு போய் காட்டுகிறேன் என சீசிங் ராஜா சொல்லியிருக்கிறார். முதலில் இரண்டு இடம் காட்டினார்.
அந்த இடத்தில் இல்லை. மூன்றாவது ஒரு இடத்தை காட்டும் போது ஒரு நாட்டுத்துப்பாக்கி அந்த இடத்தில் இருக்கிறது. அதை எடுத்துகொடுப்பது போல செய்கை செய்துவிட்டு இரண்டு ரவுண்டு சுட்டார். அவருடன் சென்றிருந்த இரண்டு இன்ஸ்பெக்டர்களில் ஒருவரை பார்த்து சுடுகிறார். அதிர்ஷ்டவசமாக குண்டுகள் இரண்டுமே இன்ஸ்பெக்டர் மீது படவில்லை. வண்டியின் மீதுதான் பட்டுள்ளது.
இதனால் இன்ஸ்பெக்டர் தப்பித்து ஓடுகிறார். இந்தபக்கம் வேளச்சேரி இன்ஸ்பெக்டர் தற்காப்புக்காக வேறு வழியில்லாமல் இரண்டு ரவுண்டு சுடுகிறார். இதில் காயம் அடைந்த சீசிங் ராஜா மயங்கி விழுகிறார். இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்.. ஆனால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இவர் மீது 6 கொலை வழக்குகள் உள்பட 39 வழக்குகள் உள்ளது.
மூன்று மாதத்திற்கு முன்பாக தேடப்படும் குற்றவாளியாக மாஜிஸ்திரேட்டு அறிவித்தார். இவர் கோர்ட்டில் ஆஜரகாவில்லை. 10 வாரண்ட் பெண்டிங் உள்ளது. தலைமறைவாகவே இருந்து வந்தார். ஆம்ஸ்ட்ராங்க் வழக்கிற்கும் இவருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. நாங்கள் தேடியது வேளச்சேரி கேசில்தான். அதிலே கைது செய்யும் போதுதான் இந்த மாதிரி நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications