இன்று பாபர் மசூதி இடிப்பு இடிப்பு நாள்! கோவை உட்பட மாநிலம் முழுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு
சென்னை: ஆண்டுதோறும் டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், தமிழகத்தில் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி இன்றைய தினம் பாபர் மசூதி தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இதையடுத்து நாடு முழுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநிலத்தில் முக்கிய பகுதிகள் அனைத்தும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் பணிகள்: குறிப்பாகக் கோவையில் மட்டும் சுமார் 2000 போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மாநகரில் 1,200 பேர் புறநகரில் 800 பேர் என மொத்தம் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், அதிக கூட்டம் கூடும் பஸ் நிலையங்கள், ரயில்வே ஸ்டேஷன்கள், வழிபாட்டுத் தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காந்திபுரம் பேருந்து நிலையம், சிங்காநல்லூர், பொள்ளாச்சி, உக்கடம், சூலூர், மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, என முக்கிய பேருந்து நிலையங்களில் காவல்துறை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு வரும் பயணிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிவோரை விசாரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வெடிகுண்டு நிபுணர்களும் தயார் நிலையில் இருக்கிறார்கள்.. அவர்கள் பொதுமக்களின் பைகளைத் தொடர்ச்சியா சோதனை செய்து வருகிறார்கள்.
முக்கிய இடங்கள்: இது தவிரக் கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்கள், தேவாலயங்கள், பள்ளி வாசல்கள் என முக்கிய வழிபாட்டுத் தலங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கே வரும் பக்தர்களும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள்.
மேலும், பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் மார்க்கெட்டுகள், கடைவீதிகளிலும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை விமான நிலையத்திலும் பாதுகாப்பு பணிக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அங்கே 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை மட்டுமின்றி தமிழகம் முழுக்க பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுக்க இருக்கும் முக்கிய கோயில்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், முக்கிய சாலைகளிலும் தொடர்ச்சியாக ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்,
-
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications