கூலிப்படை தலைவன் படப்பை குணா மனைவி உட்பட 6 பேர் போலீஸ் விசாரணைக்கு பின் விடுவிப்பு
சென்னை: பாரதிய ஜனதா கட்சியில் (பா.ஜ.க.) சேர்ந்த பிரபல கூலிப்படை தலைவன் படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள் உட்பட 6 பேரிடம் விசாரணை நடத்திய போலீசார் பின்னர் அவர்களை விடுவித்தனர்.
ஶ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்றவர் எல்லம்மாள். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய சேர்மன் பதவியை கைப்பற்றுவதற்காக அவர் முயற்சி எடுத்து அதில் தோல்வி அடைந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பாஜகவில் இணைந்தார். முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் எல்லம்மாள் பாஜகவில் இணைந்தார். ரவுடிகளை பாஜக தொடர்ந்து கட்சியில் சேர்த்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

போலீஸ் என்கவுண்ட்டர்
எல்லம்மாளின் கணவரான படப்பை குணா சென்னை புறநகர் தாதாக்களில் முக்கியமான நபர். அண்மையில் சென்னை புறநகரில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த கூடுதல் எஸ்.பி. வெள்ளத்துரை தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். செங்கல்பட்டு இரட்டை கொலை வழக்கு குற்றவாளிகளில் இருவரான தினேஷ், மொய்தீன் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

யார் இந்த படப்பை குணா?
இதனிடையே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தாதாவாக வலம் வரும் படப்பை குணா என்ற குணசேகரனை போலீசார் தேடி வந்தனர். இதன் முதல் கட்டமாக படப்பை குணாவின் கூட்டாளிகளான போந்தூர் சிவா மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் எஸ்.பி.கே.தென்னரசு, திருநாவுக்கரசு ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் போந்தூர் சேட்டு என்பவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். படப்பை குணா மீது மொத்தம் 24 கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. படப்பை குணா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியான படப்பை குணா தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார்.

படப்பை குணா மனைவி கைது
இந்த நிலையில்தான் இன்று ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மதுரமங்கலம் இல்லத்தில் இருந்த எல்லம்மாளை தனிப்படை போலீசார் வழக்கு விசாரணைக்காக சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். எல்லம்மாள் உட்பட 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த 6 பேரிடமும் படப்பை குணா எங்கே தலைமறைவாக இருக்கிறார்? என்பது உள்ளிட்ட விவரங்களுக்காக போலீசார் விசாரணை நடத்தி பின்னர் விடுவித்ததாக கூறப்படுகிறது.

போலீசார் உடந்தை?
அத்துடன் படப்பை குணாவுக்கு ஆதரவாக இருந்த போலீசார் குறித்த விவரங்களும் வெளியாகி உள்ளன. பல்வேறு வழக்குகளில் படப்பை குணா தலையிட்டு பஞ்சாயத்து செய்வதற்கு போலீசார் உதவியாக இருந்துள்ளனராம். இதற்காக படப்பை குணாவிடம் பெருந்தொகையான பணத்தை அந்த போலீசார் பெற்றதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இந்த போலீசார் மீதும் நடவடிக்கை பாயக் கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ்












Click it and Unblock the Notifications