5 சிறுமிகளை மிரட்டியே பலாத்காரம் செய்த பெருமாள்.. வசமாக சிக்கியது எப்படி? போலீஸார் பகீர் தகவல்!
சென்னை: குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட போதுதான் பெருமாள் பிஞ்சு குழந்தைகளை பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
சென்னை டிபி சத்திரம் ஆர்.வி.நகர் 1ஆவது தெரு பகுதிகளில் கூல்டிரிங்க்ஸ் கடை நடத்தி வருபவர் பெருமாள் (48). இவரது கடையில் குட்கா பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
தமிழகத்தில் குட்கா, பான் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில் இவரது கடைக்கு சென்ற டிபி சத்திரம் போலீஸார் பெருமாளின் கடைக்குச் சென்று சோதனையிட்டனர்.

பதில் அளிக்கவில்லை
அப்போது அவரது கடையில் 30 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்ததை அடுத்து பெருமாளை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் தடை செய்யப்பட்ட குட்காவை இவர் எங்கிருந்து வாங்குகிறார் என கேட்டதற்கு எந்த பதிலையும் அளிக்காமல் இருந்துள்ளார்.

தர மறுத்த பெருமாள்
அப்போது அவரிடம் இருந்த செல்போனை கேட்டனர். இதற்கு பெருமாள் தர மறுத்தனர். உடனே போனில் ஏதோ விஷயம் இருப்பதை உணர்ந்த போலீஸார் அவரிடம் இருந்து செல்போனை பறித்தனர். அதில் குட்காவை எங்கிருந்து வாங்குகிறார் என்பது குறித்த தகவல்கள் இருக்கும் என நினைத்த போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

சிறுமிகள்
ஆம், அவர் பல சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்து அதை வீடியோவாக பதிவு செய்து அவர்களை மீண்டும் மீண்டும் மிரட்டியே பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் 4 வயது சிறுமி முதல் 17 வயது வரை 5 சிறுமிகளுக்கு பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

பணம் கொடுத்த பெருமாள்
இந்த சிறுமிகளில் இருவரை பாலியல் பலாத்காரம் செய்ய ஒவ்வொரு முறையும் பெருமாள் அவர்களது தாய்களுக்கு ரூ 500 முதல் ரூ 2000 வரை பணம் கொடுத்த கொடூரமும் நடந்துள்ளது. இது குறித்து அவர் வசிக்கும் பகுதி மக்களிடம் கேட்ட போது , பெருமாள் மிகவும் அமைதியானவர். குழந்தைகளிடம் அன்பாக பழகுவார். ஆனால் தற்போது நடந்த சம்பவத்தை பார்த்தால் குழந்தைகளுடன் அவர் இந்த கீழ்த்தரமான வேலையை செய்யவே பழகியுள்ளார் என்பதை நினைக்கும் போது அதிர்ச்சி அளிக்கிறது என்றார்கள். இதையடுத்து இந்த 5 சிறுமிகளையும் பெருமாள் அவ்வப்போது பலாத்காரம் செய்ய உடந்தையாக இருந்த இரு பெண்களையும் போலீஸார் கைது செய்தனர்.
-
துடி துடித்த தூத்துக்குடி.. குடும்ப கவுரவத்துக்காக நடந்த கொடூரம்! 19 வயது இளம்பெண் ஆணவக்கொலை! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
தாறுமாறாக சரிந்த தங்கம்.. தொடர்ந்து இன்னும் சரியுமா? விலை வீழ்ச்சிக்கு காரணம் என்ன? -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்!












Click it and Unblock the Notifications