மதுரவாயல் டூ தாம்பரம் பைபாஸில் சர்.. புர்னு போன ஆட்டோக்கள்.. பணம் வைத்து ரேஸ் நடத்தியது அம்பலம்!
சென்னை: பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலையில் சட்டவிரோதமாக ஆட்டோ ரேஸ் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Recommended Video
பொதுவாக ஈசிஆர் சாலையில் பைக் ரேஸ் நடத்தப்பட்டு சில நேரங்களில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளும் நடைபெறுகின்றன. இந்த நிலையில் புதிதாக ஆட்டோ ரேஸ் நடத்தப்படுவதாக போலீஸாருக்கு பொதுமக்கள் புகார் கொடுத்துள்ளனர்.
இன்று அதிகாலை மதுரவாயல்- தாம்பரம் பைபாஸில் ஆட்டோ ரேஸ் நடத்தபட்டது. இதில் 5 க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட பைக்குகளுடன் சிலர் இந்த ஆட்டோ ரேஸை சட்டவிரோதமாக நடத்தினர்.

மதுரவாயல் டூ தாம்பரம்
மேலும் மதுரவாயல் முதல் தாம்பரம் வரை இந்த ஆட்டோ ரேஸானது துவக்கப்பட்டு, 2000 ஆயிரம் முதல் 3000 ஆயிரம் வரை பணம் பந்தயம் வைக்கப்பட்டது. கொரானோ ஊரடங்கு காலத்தில் ஆட்டோ ரேஸ் சட்டவிரோதமாக நடத்தப்படாமல் இருந்தது.

போக்குவரத்து
இந்த நிலையில் தற்போது பொது போக்குவரத்திற்கு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இன்று இந்த ஆட்டோ ரேஸ் கலாச்சாரமானது தலைத்தூக்கியுள்ளது.
கடந்த 2020 ஆண்டு நடைபெற்ற ஆட்டோ ரேசில் இதே பைபாஸில் சாலையில் நடந்த ரேஸில் விபத்து ஏற்பட்டது.

ஆட்டோ கவிழ்ந்து விபத்து
அந்த விபத்தில் ஆட்டோ கவிழ்ந்து லாரியில் மீது மோதியதில் சம்பவ இடத்திலே ஒருவர் உயிரிழந்தார். அதன் பிறகு போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து சம்பந்தபட்டவர்கள் கைது செய்யப்பட்டு ஆட்டோக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

வாகன ஓட்டிகள்
தற்போது மீண்டும் கொரானோ தாக்கம் குறைந்து உள்ள நிலையில் சிலர் சட்டவிரோதமாக இது போன்ற செயல்களில் ஈடுப்பட்டு வருகின்றனர் மேலும் இதனை தடுக்க போலீார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கையாக விடுத்துள்ளனர்.
-
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications