வெறும் புரளி! சென்னை தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தில் இருந்தது என்ன?
சென்னை: சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலானது புரளி என்றும் மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் 10க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளின் இமெயில் முகவரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் காலை 10.40 மணிக்கு கிடைத்தது. அந்த வகையில் கோபாலபுரத்தில் உள்ள டிஏவி பள்ளி, சென்னை பப்ளிக் பள்ளி, செட்டிநாடு வித்யாஸ்ரம், பவன்ஸ் வித்யாஸ்ரம் உள்ளிட்ட பள்ளிகளுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் தங்கள் பகுதிக்குள்பட்ட காவல் நிலையங்களுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து போலீஸார், வெடிகுண்டு நிபுணர்களுடன் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர்.
அப்போது பள்ளி குழந்தைகள் பாதுகாப்பான இடங்களில் அமர வைக்கப்பட்டனர். இதனிடையே போலீஸார் அந்தந்த பள்ளிகளுக்கு வந்த மெயிலை பார்த்த போது ஒரே மெயில் ஐடியில் இருந்து மிரட்டல் வந்துள்ளது தெரியவந்தது. [email protected] என்ற இமெயில் முகவரியிலிருந்து வந்துள்ளது.
அந்த மெயிலில் இரு சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அவை வெடித்து சிதறுவதற்குள் உங்கள் மாணவர்களை காப்பாற்றுங்கள். இந்த விஷயத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என அந்த மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியாகவே தகவல்கள் இருந்தன. மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்ட நிலையில் அவை சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டன. இந்த நிலையில் பள்ளி பெற்றோர்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் குறித்து தகவலே தெரிவிக்காமல் பிள்ளைகளை அழைத்து செல்லுங்கள் என்று மட்டும் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து பெற்றோர் அனைவரும் ஒரே நேரத்தில் கூடியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் வெடிகுண்டு நிபுணர்களும் வெடிகுண்டை செயலிழக்கும் நிபுணர்களும் சோதனை நடத்தியதில் அந்த மிரட்டலானது புரளி என தெரியவந்தது.
இது போல் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. எனவே பெற்றோர் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் , பிள்ளைகளை எந்த பதற்றமும் இன்றி அழைத்து செல்லுமாறும் அறிவுறுத்தினர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் அந்த நபர் பிடிபடுவார் என தெரிகிறது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications