சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முதல்வர் ஸ்டாலினை.. பேஸ்புக்கில் ஒருமையில் குறிப்பிட்டு விமர்சித்த போலீஸ் எஸ்.ஐ. அதிரடி சஸ்பெண்ட்

பேஸ்புக்கில் அவதூறு பரப்பிய எஸ்ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

சென்னை: ஃபேஸ்புக்கில் அவதூறு கருத்துக்களை பரப்பியதற்காக சென்னை பூக்கடை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சேகர் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.. அவதூறு பரப்பினால், துறை ரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கை சஸ்பெண்ட் என்றாலும், சேகர் பதிவிட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது.

ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களின் பயன்பாடுகள் அதிகரித்து வருகின்றன.. இதில் பொதுமக்களும் தங்களுக்கு விருப்பமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்..

அதேசமயம், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சில அவதூறான கருத்துகளையும் பதிவிடுவது, கடந்த சில வருடங்களாக நடந்து வருகிறது.. இது எல்லை மீறும்போது, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

ஸ்டாலினை பாராட்டிய வானதி.. ஆனாலும் போற போக்கில் திமுகவுக்கு ஒரு இடி.. வைத்த முக்கிய கோரிக்கை..!ஸ்டாலினை பாராட்டிய வானதி.. ஆனாலும் போற போக்கில் திமுகவுக்கு ஒரு இடி.. வைத்த முக்கிய கோரிக்கை..!

எஸ்.ஐ.

எஸ்.ஐ.

அந்த வகையில் சேகர் என்ற போலீஸ்காரரும், தன்னுடைய கருத்தை பதிவிட்டு, இப்போது வசமாக சிக்கி கொண்டுள்ளார்.. தமிழக காவல் துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் சேகர்.. இப்போது சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராகப் பணியில் உள்ளார்... இவர் சமீபத்தில் நண்பரின் பேஸ்புக் பக்கத்தில் அவரது பதிவு ஒன்றுக்கு பதில் தந்திருந்தார்..

கருப்பு பணம்

கருப்பு பணம்


நண்பரின் பதிவில், "பிரதமர் மோடி கருப்புப் பண ஒழிப்பு தொடர்பில் ஒருமுறை பேசியபோது, சுவிஸ் வங்கியில் உள்ள கருப்புப் பணத்தை மீட்டால், நாட்டில் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடலாம், அந்த அளவுக்கு நம் நாட்டின் ஊழல்வாதிகள் கருப்புப் பணத்தை அங்கே தேக்கி வைத்துள்ளார்கள்.. அதை மோடி ரூ.15 லட்சம் கொடுப்பதாக சொன்னார் என்று காங்கிரஸ், திமுக பிரசாரம் செய்தது. அதையே திமுகவினர் அவதூறுப் பிரசாரம் செய்து வருகிறது" என்று நண்பர் பதிவு செய்திருந்தார்.

காட்டு மிராண்டி

காட்டு மிராண்டி

இந்த பதிவுக்குதான் காவல் உதவி ஆய்வாளர் சேகர் பதில் தந்திருந்தார். அதில் "தமிழ் என்ற காட்டுமிராண்டி மொழில.." என ஆரம்பித்து (முதல்வர் சொன்ன ஒரு வாக்குறுதியை குறிப்பிட்டு) அதை கேளுங்கடா என்றால், புரியாத ஹிந்தி மொழியில் பேசியதை எதோ புரிஞ்ச மாதிரி, சொல்லாத லட்சத்தை கேட்கிறான் பாருங்க கொத்தடிமை" என்று பதிவு செய்திருந்தார்.. இதையடுத்து, தமிழக காவல் துறைக்கும் காவலர்களுக்கும் நன்மை செய்து வரும் அரசு குறித்து, ஒரு போலீஸ்காரரே இப்படி பதிவு செய்வது நியாயமா என திமுகவைச் சேர்ந்த ஒருவர் பேஸ்புக்கில் கேள்வி எழுப்பி இருந்தார்... இது வைரலாகவும் பரவியது.

விசாரணை

விசாரணை

இதையடுத்து, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், இது சம்பந்தமாக உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதில் உதவி ஆய்வாளர் சேகர் கருத்து பதிவிட்டது சர்ச்சைக்குரியது என்று தீர்மானித்து, அவரை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.. மற்றொருபுறம், காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டராக இருக்கும் ஒருவரே தமிழக முதலமைச்சரை சமூகவலைதளத்தில் மறைமுகமாக சாடியிருப்பது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

English summary
Police Sub Inspector Sekar suspended for his Defamatory Status in Facebook
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X