Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திடீர்னு வந்த போன் கால்.. வீட்டில் இருந்து போலீஸ் எடுத்தது என்ன? பெலிக்ஸின் மனைவி பரபர பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பெலிக்ஸ் ஜெரால்டின் வீட்டில் போலீசார் இன்று சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனைக்கு பிறகு 53 ஆவணங்களை போலீசார் எடுத்துச்சென்றதாக பெலிக்ஸ் ஜெரால்டின் மனைவி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

தமிழக காவல் துறையில் பணியாற்றும் பெண்களை தவறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் தேனியில் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்திலும் கைதாகியுள்ளார்.

Police Take 53 documents from our house YouTuber Felix Gerald wife says

இதற்கிடையே சவுக்கு சங்கர் கைதை தொடர்ந்து அவர் பேட்டியை ஒளிபரப்பிய ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்படுவார் எனக் கூறப்பட்டது. உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை அவதூறாக பேசும் வகையில் கேள்வி கேட்டதாக பெலிக்ஸ் ஜெரால்டு மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து பெலிக்ஸ் ஜெரால்டு முன் ஜாமின் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தபோது நீதிபதி குமரேஷ் பாபு கடுமையான கண்டனங்களை கூறியிருந்தார்.

மேலும் யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த வேண்டும். நேர்காணல் தர வருபவர்களை அவதூறு கருத்துக்களை கூற தூண்டும் விதமாக பேட்டி எடுப்பவர்களை முதல் எதிரியாக சேர்க்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் முன் ஜாமின் மனு நிலுவையில் இருக்கும் போது பெலிக்ஸ் ஜெரால்டு தலைமறைவானார். அவர் டெல்லியில் இருப்பதாக தகவல் கிடைத்தது.

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் நொய்டா பகுதியில் விடுதி ஒன்றில் அவர் தங்கி இருந்தது தெரியவந்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த 10ஆம் தேதி இரவு டெல்லியில் தனிப்படை போலீசார், பெலிக்ஸை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து அவர் ரயில் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் திருச்சியில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டார்.

இதையடுத்து அவரை 3ஆவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் நீதிபதி ஜெயபிரதா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். பெலிக்சை மே 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதை அடுத்து போலீஸ் பாதுகாப்புடன் பெலிக்ஸ் ஜெரால்ட் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் பெலிக்ஸ் வீட்டில் சோதனையிடுவதற்காக நீதிமன்ற உத்தரவுடன் திருச்சி போலீசார் வந்தனர். காலிங் பெல் அடித்தவுடன் பெலிக்ஸ் மனைவி வெளியே வந்தார். அப்போது அங்கிருந்த போலீசாரிடம், நீங்கள் யார் என கேட்டார். அதற்கு அவர்கள் நீதிமன்ற உத்தரவை காட்டி வீட்டை சோதனையிட வந்தனர் என தெரிவித்தனர்.

பிறகு கோர்ட் ஆர்டரை பார்த்த பெலிக்ஸ் மனைவி, போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். தொடர்ந்து போலீசார் விதிகளை கூறி சோதனை நடத்த சென்றனர். பலமணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது. வீட்டில் சோதனை நடத்தி முடித்த பின், அவரது அலுவலகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே, வீட்டில் சோதனை முடிந்த பிறகு பெலிக்ஸ் ஜெரால்டின் மனைவி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

போலீசார் கைப்பற்றியது 53 பொருட்கள்... போலீசாருக்கே ஒரு குழப்பம் இருந்தது. முதலில் 59 பொருட்கள் என்றனர். அப்போது எந்த அதிகாரியிடம் போன் கால் வந்தது என்று தெரியவில்லை. உடனே இன்னொரு லெட்டர் எழுதுங்க என்று சொன்னார்கள். அதில், 53 பொருட்கள் குறிப்பிட்டுள்ளார். சிம்கார்டு, பெலிக்ஸின் ஐடிகார்டுகள் போன்றவற்றை எடுத்தார்கள்.

Police Take 53 documents from our house YouTuber Felix Gerald wife says

காலையில் ஒரு 8 மணிக்கு வந்திருந்தேன். 8 மணிக்கு வந்த உடனேயே 20 முதல் 30 நிமிடத்தில் போலீசார் வருவதாக தகவல் வந்தது. திடீரென்று போலீஸ் வருவதாக சொன்னதும் எனக்கு ஒரு பயம் வந்தது. நான் இதை நினைக்கவில்லை. அவர்களிடம் செர்ச் வாரண்ட் இருக்கும் என்று. திடீர்னு போலீஸ் கதவை உடைத்து வந்தால் நம்முடைய மனநிலை எப்படி இருக்கும். இதை எல்லாரும் புரிஞ்சுக்கணும்.

கணவர் வந்து ஒரு நாள் முன்னாடி ஜெயிலில் அடைக்கப்படுகிறாங்க.. அதுவும் அன்எக்ஸ்பெக்டட்.. நான் இதையெல்லாம் கடந்து வீட்டுக்கு வரனும்.. ஆபீஸ் போகனும்.. இப்படியெல்லாம் இருக்கும் பட்சத்தில் திடீரென்று காவல்துறை காலை 9 மணிக்கு இங்க வந்து நிற்குறாங்க.. வி ஆர் சியர்சிங் பார் மி என்று சொல்லும் போது எனக்கு இதைவிட ஒரு மன கஷ்டத்தை தமிழ்நாடு அரசு கொடுக்க முடியாது.

ஊடகங்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எல்லாருக்கும் தெரியுது நான் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சிரமப்படுகிறேன் என்று. சாப்பாடு இன்றி தூக்கமின்றி சிரமப்படுகிறேன். நான் அடிக்கடி கோர்ட்டுக்கு போனது கிடையாது. இது தான் முதல் தடவை. கோர்ட்டில் ரொம்ப நேரம் ஆகிவிட்டது. சாதாரண் பெண்கள், மனைவிகளுக்கு இதுமாதிரியான கஷ்டம், நெருக்கடியை தமிழ்நாடு அரசு கொடுக்க கூடாது என்பது தான் என்னுடைய பணிவான கோரிக்கை. இவ்வாறு அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+