விருந்தில் காது கேட்க முடியாத, வாய் பேச முடியாத சிறுமியை... காம கொடூரரர்களை சுட்டு பொசுக்கிய போலீஸ்
சென்னை: உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர்கேரி மாவட்டத்தில் நடந்த ஒரு கல்யாண நிகழ்வு, கற்பனையே செய்ய முடியாத கொடூரமான குற்ற சம்பவத்தால் பெரும் பரபரப்புக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாகியுள்ளது. வாய் பேச முடியாத மற்றும் காது கேட்காத மாற்றுத் திறனாளி சிறுமி ஒருவர், திருமண மண்டபத்தில் வைத்து கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சிங்காகி போலீஸ் ஸ்டேஷனுக்குபட்ட கிராமம் ஒன்றில் நேற்று முன்தினம் இரவு பிரம்மாண்டமான திருமண விழா சிறப்பாக நடைபெற்று கொண்டிருந்தது.. அந்த திருமண நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரும் ஆட்டம், பாட்டத்துடன் மகிழ்ச்சியில் மூழ்கி திளைத்திருந்தனர்.

மாற்றுத்திறனாளி சிறுமி
இந்த விழாவிற்கு வந்திருந்த 13 வயதுடைய மாற்றுத்திறனாளி சிறுமி திடீரென காணாமல் போனார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் மண்டபம் முழுவதும் தேடினர்.
சிறுமிக்கு பேச்சு மற்றும் கேட்கும் திறன் இல்லாததால், அவரைத் தொடர்பு கொள்வதில் கடும் சிரமம் ஏற்பட்டது. பல மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு, திருமண மண்டபத்திற்கு அருகில் இருந்த கரும்புத்தோட்டத்தில் அந்த சிறுமி மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.
கரும்புத் தோட்டம்
அவர் கொடூரமான கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். பாதிக்கப்பட்ட சிறுமி உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
விசாரணையில், இந்த குற்றச் சம்பவத்தில் ஜாவேத் (28) மற்றும் சோட்டு ஆகிய இரு இளைஞர்களுக்குத் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
நேற்று பகலில், ஜாவேத் பதுங்கியிருந்த இடத்தைக் கண்டறிந்து போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசார் கண்டதும் தப்பி ஓட முயன்ற ஜாவேத், தன்னிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட முயன்றதாகக் கூறப்படுகிறது.
ஜாவேத் போலீஸ்
இதையடுத்து, போலீசார் தற்காப்புக்காகவும், அவரைக் கட்டுப்படுத்தவும் ஜாவேத்தின் வலது காலில் சுட்டனர். குண்டு பாய்ந்து காயமடைந்த ஜாவேத்தை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து நாட்டுத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. காயமடைந்த குற்றவாளி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தப்பி ஓடிய மற்றொரு குற்றவாளியான சோட்டுவை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இருவரும் இணைந்து சிறுமியை திருமண மண்டபத்தில் இருந்து கடத்திச் சென்று கூட்டுப் பலாத்காரம் செய்தது விசாரணையில் உறுதியாகியுள்ளது.
முக்கிய குற்றவாளி
இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் மீதும் போக்சோ சட்டம், கடத்தல் மற்றும் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என்ற குற்றவாளி நாட்டுத்துப்பாக்கியுடன் போலீசாரை நோக்கி சுட முயன்றதால், போலீசார் பதிலடி கொடுத்துள்ளனர்.
சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் முக்கிய குற்றவாளியை போலீசார் சுட்டுப் பிடித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் திருமண விழாவில் பங்கேற்ற அனைவரையும் உலுக்கியுள்ளதுடன், அப்பகுதி மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications