சீச்சீ.. நிர்வாணமாக பெண்கள் முன்பு நின்ற போலீஸ்காரர்.. அதிர்ச்சி செயலால் கொந்தளித்த மக்கள்
நிர்வாண கோலத்தில் நின்று அட்டகாசம் செய்துள்ளார் ஒரு போலீஸ்காரர்
சென்னை: போதையில் நடுரோட்டில் பெண்கள் இருக்கிறார்கள் என்றுகூட பாராமல், போலீஸ்காரர் ஒருவர் நிர்வாண கோலத்தில் நின்று செய்த அட்டூழியம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Recommended Video
சென்னை அம்பத்தூர் ஓரகடம் ஏ.கே பெரியார் குறுக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ண குமார்.. இவர் கோயம்பேடு போக்குவரத்து தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் கிருஷ்ணகுமாருக்கும் அதே பகுதியில் வசித்துவரும் காய்கறி வியாபாரியான முருகேசன் என்பவருக்கும் இடையே வாகனம் நிறுத்துவதில் பிரச்சனை எழுந்துள்ளது...

கிருஷ்ணகுமார்
இதுகுறித்து கிருஷ்ணகுமார் முருகேசனிடம் மதுபோதையில் சென்று தகராறு செய்துள்ளார். "நான் தினமும் போய்வரும் வழியில் நீ ஏன் உன் வண்டியை நிறுத்துகிறாய்?" என்று கேட்டு அவரது வாகனத்தை காலால் எட்டி உதைத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.. ஆனாலும் முருகேசன் இதற்கு கோபப்படாமல், போலீஸ்காரர் கிருஷ்ணகுமாருக்கு மதிப்பளித்து அவருடன் சமரசம் பேசியிருக்கிறார்..

கண்டனம்
பிறகு தன்னுடைய கடைக்கு சென்றுவிட்டார்... ஆனால் ஆத்திரம் தீராத கிருஷ்ணகுமார் மதுபோதையிலேயே முருகேசன் மனைவியிடம் சென்று தகாத வார்த்தைகளில் திட்டி உள்ளார்.. அந்த பெண்ணை அடிக்கவும் முற்பட்டுள்ளார்... இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், கிருஷ்ணகுமாரை கண்டித்துள்ளார்.. இதை பார்த்த அந்த பகுதி மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.. ஆனால், எதை பற்றியும் கவலைப்படாத போதை தலைக்கேறிவிட்ட கிருஷ்ணகுமார், திடீரென தன்னுடைய டிரஸ்ஸை களைந்து நிர்வாண கோலத்தில் அவர்கள் முன்புநின்று, அருவெறுக்கும் விதத்தில் நடந்து கொண்டுள்ளார்.

கெட்ட வார்த்தைகள்
அந்த தெருவில் நின்று சத்தம் போட ஆரம்பித்தார்.. சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலர்களை கீழே தள்ளியும் எட்டி உதைத்தும் அராஜகத்தில் ஈடுபட்டார்.. பிறகு சத்தமாக கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்ட துவங்கினார்.. அதற்குள் அந்த பகுதியில் இருக்கும் ஆண்கள், பெண்கள் என மொத்தமாக திரண்டு வந்தனர்.. அவர்களை பார்த்தும் ஆவேசமாக கிருஷ்ணகுமார் பேசினார்.. ஒருஇடத்தில் அவரால் நிற்க முடியவில்லை.. தள்ளாடி கொண்டே கோபத்தில் ஆபாச வார்த்தைகளை கொட்டினார்.

முருகேசன்
முருகேசன் வீட்டு முன்பு நின்று கொண்டு, வாசலில் நட்டு வைத்திருந்த மரங்களையும், செடிகளையும் சாய்த்து சேதப்படுத்தினார்.. கீழே கிடக்கும் கற்களை எடுத்து முருகேசன் வீட்டுக்குள் எறிந்தார்.. மண்ணை அள்ளி அள்ளி அந்த வீட்டிற்குள் போட்டார்.. இதையடுத்து, அவரை தடுத்து நிறுத்த சிலர் முன்வந்தனர்.. ஆனால், அவர்களையும் ஆபாசமாக பேசியதுடன், ஆபாச சைகைகளிலும் கிருஷ்ணகுமார் ஈடுபட்டார்.. இதனால் அதிர்ந்து போன அந்த பகுதி மக்கள் முகம் சுளித்து கொண்டே பின்வாங்கினர்.

அநாகரீகம்
இதனால் முருகேசன் மனைவி அம்பத்தூர் போலீசில் புகார் தந்துள்ளார்.. போலீசாரோ, அந்த புகாரை பெற்றுக் கொண்டு விசாரிப்பதாக சொல்லி மெத்தனம் காட்டியதாக தெரிகிறது.. எனவே, முருகேசன் குடும்பத்தினர் அம்பத்தூர் இணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.. இதையடுத்து, கிருஷ்ணகுமார் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.. போலீஸ்காரர் நிர்வாண கோலத்தில் பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேதனை
தமிழக போலீசுக்கு எப்போதுமே ஒரு மரியாதை இருந்து வருகிறது.. தேசிய அளவில் நம்முடைய காவல்துறை 5வது இடத்தில் உள்ளது.. ஸ்காட்லாந்து போலீசுக்கு ஒப்பாக நம்மைதான் உதாரணம் சொல்வார்கள்.. கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின் வரை, நம் முதல்வர்கள் தமிழக போலீசுக்கு உரிய முக்கியத்துவத்தையும், சலுகைகளையும் தந்து உயர்த்தியபடியேதான் வந்திருக்கிறார்கள்.. அதற்கேற்றபடி தமிழக காவல்துறையும் எத்தனையோ காரியங்களையும், சாதனைகளையும் சாதித்து காட்டி வருகிறது.. ஆனாலும் ஆங்காங்கே இப்படி ஒருசில போலீசார் செய்யும் மலிவான செயல்களால், ஒட்டுமொத்த காவல்துறைக்கும் கெட்ட பெயர் வந்துவிடுகிறது என்பது வேதனையே.
-
பனை விவசாயியை எஸ்.ஐ இசக்கிராஜா சுட்ட வழக்கு.. சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்!












Click it and Unblock the Notifications