ஜெயக்குமார் மரணத்தில் திருப்பம்.. மனைவி கேட்ட கேள்வி.. மகனிடம் எடுக்கப்பட்ட டிஎன்ஏ.. என்ன நடக்குது?
சென்னை: ஜெயக்குமாரின் மகனிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்ய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உயிரிழந்த விவகாரத்தில் இதனால் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது.
சம்பவ இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உடல் தனது கணவரின் உடலே அல்ல என ஜெயக்குமாரின் மனைவி ஜெயந்தி மறுத்து உள்ளார். உடலில் இருக்கும் அடையாளங்கள் தனது கணவரின் உடல் அடையாளங்கள் இல்லை என்று மறுத்துள்ளார்.

இந்த நிலையில்தான் ஜெயக்குமாரின் மகனிடம் DNA பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு பேரிடமும் டிஎன்ஏ பரிசோதனை செய்து அதை ஒப்பிட்டு பார்க்க முடிவு செய்துள்ளனர்.
காங்கிரஸின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் கே.பி.கே ஜெயக்குமார் தனசிங் மரணத்தில் வெளிவந்துள்ள ஆதாரங்கள் வைத்து பார்க்கையில் இது கொலையாக இருக்கலாம் என்றே முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
ஜெயக்குமார் மே 3ஆம் தேதி காணாமல் போனதாகக் கூறப்பட்ட நிலையில், சனிக்கிழமை அவரது வீட்டின் பின்புறத்தில் பாதி எரிந்த நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. போலீஸ் வட்டார தகவலின்படி, ஜெயக்குமார் தனக்கு நிறைய பணம் கொடுக்க வேண்டிய மூத்த அரசியல்வாதிகள் உட்பட சில நபர்களால் உயிருக்கு பயந்து வாழ்ந்து வந்ததாக கூறப்பட்டது.
அதோடு, உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக திருநெல்வேலி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்க முடிவெடுத்து கடிதம் எழுதி இருக்கிறார். அவர் எழுதியதாகக் கூறப்படும் இரண்டு கடிதங்கள் - ஒன்று திருநெல்வேலி எஸ்பிக்கும் மற்றொன்று அவரது மருமகனுக்கும். இரண்டும் அவரது அலுவலக மேஜையில் காணப்பட்டன, அவை ஒருபோதும் போலீசாரிடம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இவரை வீட்டின் பின்புறத்தில் மின் கம்பிகளில் கட்டி வைத்து எரித்து கொலை செய்துள்ளனர். அதற்கு முன் அவரை துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இவர் எழுதிய புகார் ஏன் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படவில்லை என்பது தெளிவாகத் தெரியவில்லை. அந்த கடிதத்தில் தனக்கு பணம் தர வேண்டியவர்களில் ஒரு எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் எம்.பி ஆகியோர் அடக்கம். ஆனால் இவர்கள் பணம் தரவில்லை. லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக அவரது வீட்டிற்கு அருகே சிலர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடுவது கண்டுபிடிக்கப்பட்டது என்றும் போலீசார் தரப்பு தெரிவித்துள்ளது.
போலீஸ் விசாரணையில், ஜெயக்குமார் தான் எழுதிய கடிதங்களை நகல்கள் எடுக்குமாறு தனது உதவியாளரிடம் கூறியது தெரியவந்தது. மே 2ம் தேதி மாலை அவர் காணாமல் போனாலும், மறுநாள் மாலைதான் புகார் அளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவரின் ஓரளவு கருகிய உடலின் மீது ஒரு மரப் பலகை வைக்கப்பட்டு, அவரது வீட்டின் பின்னால் கண்டுபிடிக்கப்பட்டது.
அது உலோக கம்பிகளால் கட்டப்பட்டு இருந்தது. பாத்திரங்களைக் கழுவுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு ஸ்க்ரப்பர் அவரது வாயில் அடைக்கப்பட்டு இருந்தது, ஒருவேளை அவர் சத்தம் போடுவதை தடுக்கும் முயற்சியில் இப்படி செய்து இருக்கலாம் என்று போலீசார் நம்புகின்றனர்.
ஜெயக்குமார் தனசிங் மரணத்தில் வெளிவந்துள்ள ஆதாரங்கள் வைத்து பார்க்கையில் இது கொலையாக இருக்கலாம் என்றே முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
"சம்பவம் மே 2 அல்லது 3 இரவு நடந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது வீட்டில் இருந்த ஜெயக்குமாரின் மனைவியும் மகனும் வழக்கத்திற்கு மாறான எதையும் கேட்கவில்லை அல்லது பார்க்கவில்லை என்று போலீசிடம் கூறியுள்ளனர் . அக்கம்பக்கத்தினரும், யாரையும் பார்க்கவில்லை அல்லது சந்தேகப்படும்படியான சத்தம் எதுவும் கேட்கவில்லை என்று கூறுகின்றனர். எரிபொருள், மரப்பலகை மற்றும் கம்பிகள் அனைத்தும் வீட்டின் பின்புறத்தில் இருந்து எடுக்கப்பட்டது. வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி வேலை செய்யவில்லை.
இதனால் டிஎன்ஏ சோதனை, போஸ்ட் மார்ட்டம் சோதனை இவைதான் உண்மையை கொண்டு வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கொலைக்கு பின் நாம் நினைக்காத வேறு எதோ ஒன்று நடந்து இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications