Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூட்டணி ‘லாக்’ ஆகல? மாற்றிப் பேசும் மலை.. டெல்லி யோசிப்பது ‘அந்த’ புள்ளியில்.. விளக்கும் எக்ஸ்பர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : எடப்பாடி பழனிசாமிக்கு சீட் கன்வெர்ட்டிங் கெப்பாசிட்டி இல்லை, அவர் கடைசி நேரத்தில் சிறுபான்மையினர் வாக்குகள் பாஜகவுடன் சேர்ந்தால் பாதிக்கும் என்ற புள்ளியில் தனித்துப் போட்டியிடவும் தயங்க மாட்டார் என்பதை பாஜக தலைமை உணர்ந்திருக்கிறது எனக் கூறியுள்ளார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி.

அதிமுக கூட்டணி தொடர்பாக அண்ணாமலை பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில், அவரை டெல்லிக்கு அழைத்துப் பேசியது பாஜக தலைமை. இதைத்தொடர்ந்து அமித்ஷா தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி தான் என்பதை உறுதி செய்தார்.

அதேசமயம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேர்தல் சீட் ஒதுக்கப்பட்ட பிறகு தான் கூட்டணி உறுதிப்படுத்தப்படும். கூட்டணியில் இருக்கிறோம் என அமித்ஷா கூறினாரே தவிர, கூட்டணியை உறுதி செய்யவில்லை எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், அமித் ஷா சொல்லியும், அண்ணாமலை இவ்வாறு பேசுவது ஏன் என்பது பற்றி அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

 அண்ணாமலைக்கு என்ன பிரச்சனை

அண்ணாமலைக்கு என்ன பிரச்சனை

கேள்வி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக கூட்டணியில் இருக்கிறோம் என்று கூறிய பிறகும், அண்ணாமலை, அதிமுகவுடன் கூட்டணி உறுதி என்று சொல்லமுடியாது, அரசியலில் எதுவும் கல்லில் எழுதப்பட்டவை அல்ல, தண்ணீரில் எழுதப்பட்டவைதான் என்கிறார்.. அதிமுகவுடன் கூட்டணி என்று டெல்லி சொல்லியும் அண்ணாமலைக்கு என்ன பிரச்சனை?

ரவீந்திரன் துரைசாமி : அமித் ஷா, அண்ணாமலை இருவரும் சொல்வது ஒன்றுதான். அமித் ஷா சாஃப்ட்டாக பேசுகிறார். அண்ணாமலை இங்கு அனைவருக்கும் புரியும்படி பேசுகிறார். கூட்டணியை பாஜகவின் டெல்லி தலைமை தான் முடிவு செய்யும் என்கிறார் எடப்பாடி பழனிசாமி. லோக்சபா எம்.பியாக இருக்கும் ஓபி ரவீந்திரநாத் அதிமுக எம்.பி இல்லை என மாற்றப்படுவார் என்பது ஈபிஎஸ்ஸின் எதிர்பார்ப்பு. மெகா கூட்டணி அமைப்போம் என்று சொன்னார் ஈபிஎஸ். நான் தான் எம்ஜிஆரின் அதிமுக, ஜெயலலிதாவின் அதிமுக என்கிறார். ஆனால், காங்கிரஸோ, விடுதலை சிறுத்தைகளோ அப்படி மதிக்கவில்லை.

 பாஜகவுக்கு பாதிப்பு

பாஜகவுக்கு பாதிப்பு

கேள்வி : எடப்பாடி பழனிசாமியை பாஜக தலைமை நம்பவில்லை என்றால், தேர்தலுக்கு இவ்வளவு காலம் இருக்கும் நிலையில், ஏன் இப்போதே அதிமுகவுடன் கூட்டணி என அமித் ஷா சொல்கிறார்?

ரவீந்திரன் துரைசாமி : கூட்டணி உறுதியாவது என்பது அண்ணாமலை சொல்வது போலத் தான் அமையும். எடப்பாடி பழனிசாமியால் சீட் கன்வெர்ட் செய்யமுடியாது என்பது பாஜக தலைமைக்குத் தெரியும். பாஜகவின் நிரூபிக்கப்பட்ட பலம் என்பது 3.5% வாக்கு என்பதும், எடப்பாடி பழனிசாமியால் கொங்கு மண்டலத்தில் கூட சீட் கன்வெர்ட் செய்துதர முடியவில்லை என்பதும் தெரியும். 2014ல் சிபி ராதாகிருஷ்ணன் அதிமுக கூட்டணி இல்லாமல் பெற்ற வாக்குகளை விட 2019ல் அதிமுக கூட்டணியில் நின்று எடுத்த வாக்குகள் 2 சதவீதம் குறைவு. எடப்பாடி பழனிசாமி மீதான எதிர்ப்பு ஓட்டுகள் அன்றைக்கு பாஜகவை பாதித்தது என்பது அமித் ஷாவுக்கும், மோடிக்கும் நன்றாகவே தெரியும்.

 சீட் கன்வெர்ட்டிங்

சீட் கன்வெர்ட்டிங்

ஈரோடு கிழக்கு தொகுதி பூத் வாரியான அனலிசிஸ் பார்த்தபிறகு அண்ணாமலைக்கும் தெரியவந்துவிட்டது. அதற்கு முன்னர் மாறுபட்ட கருத்தில் தான் இருந்தார். இடைக்கால பொதுச் செயலாளர் அண்ணன் ஈபிஎஸ் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார். எடப்பாடி பழனிசாமிக்கு சீட் கன்வெர்ட்டிங் கெபாசிட்டி இல்லை, அவர் கடைசி நேரத்தில் கிறிஸ்தவர், இஸ்லாமியர் வாக்குகள் பாஜகவுடன் சேர்ந்தால் பாதிக்கும் என்ற புள்ளியில் தனித்துப் போட்டியிடவும் தயங்க மாட்டார் என்பதை பிரதமர் மோடி உணர்ந்திருக்கிறார். அதனால் தான் இதுவரை ஓபிஎஸ் - ஈபிஎஸ்ஸுக்கு 50-50% என்ற வகையிலேயே காட்டினார். எடப்பாடி பழனிசாமி மீது பாஜக தலைமை சந்தேகப்படுகிறது. அதனால் தான் அவருக்கு தனியாக மரியாதை அளிக்கவில்லை.

 லாக் செய்யவில்லை

லாக் செய்யவில்லை

எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருக்கும் அதிமுக வாக்காளர்களில் ஒரு பெரும் பகுதி பாஜக எதிர்ப்பு வாக்காளர்கள். அவர்கள் திராவிடக் கட்சி என்ற அடிப்படையில் திமுகவுக்கு வாக்களித்தாலும் அளிப்பார்களே தவிர மோடிக்கு ஓட்டு போட மாட்டார்கள். கேபி முனுசாமி, சிவி சண்முகம், தமிழ்மகன் உசேன், ஜெயக்குமார், வைகைச்செல்வன் உள்ளிட்டோர் திமுக vs அதிமுக என்றுதான் எப்போதும் போட்டி எனப் பேசி அந்தக் கருத்தியலில் ஒரு 10% வாக்குகளை பாஜகவுக்கு செல்ல விடாமல் தடுத்து, திமுகவுக்கு தள்ளிவிடப் பார்ப்பார்கள். எடப்பாடி பழனிசாமியை நம்பி எதுவும் செய்ய முடியாது என்பது தான் பாஜக தலைமையின் கணக்கு. அதனால், கூட்டணி சாய்ஸை இன்னும் லாக் செய்யாமல் ஓப்பனாகவே வைத்திருக்கிறது பாஜக. அண்ணாமலை பேசுவதும் அந்த அடிப்படையில் தான்" எனத் தெரிவித்துள்ளார் ரவீந்திரன் துரைசாமி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+