தமிழக அரசியலில் சூறாவளி.. ஒரே நாளில் கெத்து காட்டும் திமுக - பாஜக.. சபாஷ் சரியான போட்டி!
திமுக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் இன்று தமிழகத்தில் தனித்தனியாக பெரிய பொதுக்கூட்டங்களை நடத்த உள்ளது.
Recommended Video

சென்னை: திமுக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் தங்களது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து இன்று தமிழகத்தில் தனித்தனியாக பெரிய பொதுக்கூட்டங்களை நடத்த உள்ளது.
தமிழக அரசியல் இன்றைய நாள் மிகவும் பரபரப்பான நாள் என்றுதான் கூற வேண்டும் . தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான கூட்டணிகள் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
இன்னும் அதிமுக கூட்டணி மட்டும் முழுமையடையாமல் இருக்கிறது. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் இரண்டு பெரிய பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது.

பாஜக கூட்டம்
இன்று மாலை சென்னையில் வண்டலூர் அருகே பாஜக - அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. பிரதமர் மோடி இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார். முறையாக கூட்டணி உருவாகி அதிமுக - பாஜக சார்பாக நடத்தப்படும் நேரடி தேர்தல் கூட்டணி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக கூட்டம்
அதேபோல் இன்னொரு பக்கம் இன்று மாலை திமுக சார்பில் விருதுநகரில் கூட்டம் நடத்தப்பட உள்ளது. திமுக தலைவர் தலைமையில் இந்த கூட்டம் நடக்கிறது. தென்மண்டல திமுக நிர்வாகிகள், 9 மாவட்ட நிர்வாகிகள், செயலாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

இரண்டு கூட்டங்கள்
இந்த இரண்டு கூட்டங்களும் பின் வரும் விஷயங்கள் காரணமாக முக்கியத்துவம் பெறுகிறது.
1. இரண்டு கூட்டணிகளும் முடிவான பின் நடக்கும் முதல் பொதுக்கூட்டம் ஆகும் இது.
2. இரண்டு கட்சிக்கும் முறையாக நடக்கும் முதல் தேர்தல் பொதுக்கூட்டம்.
3. பிரதமர் மோடி முன்னிலையில் அனைத்து கூட்டணி கட்சியினரும் இன்று மாநாட்டிற்கு வருகிறார்கள்.
4. ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த கூட்டம் தென் மாவட்டங்களில் திமுகவை வலுப்படுத்தும் என்கிறார்கள்.

ஒரே திட்டம்தான்
இந்த பொதுக்கூட்டத்தில் இரண்டு கூட்டணிகளும் முக்கிய திட்டம் ஒன்றுடன்தான் களமிறங்குகிறது. கூட்டணி கட்சிகள் அனைத்தையும் மேடை ஏற்ற இரண்டு மாநாட்டில் திட்டமிடப்பட்டு இருக்கிறது. பாஜக பொதுக்கூட்ட மேடையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் ராமதாஸ், எம்.பி அன்புமணி, ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று கூறுகிறார்கள். இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்வது சந்தேகம்தான்.

திமுக என்ன திட்டம்
அதேபோல் திமுகவும் இந்த பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோரை களமிறக்க முடிவு செய்துள்ளது. கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சித் தலைவர்களும் இன்று மேடை ஏறுவார்கள். பிரம்மாண்ட பொதுக்கூட்டமாக இது நடக்கும் என்கிறார்கள்.

கூட்டம் கூட்ட திட்டம்
அதேபோல் இந்த பொதுக்கூட்டத்தில் யாருக்கு அதிக கூட்டம் கூடும் என்பதும் பெரிய கேள்வியாக மாறி இருக்கிறது. திமுக கட்சியின் பொதுக்கூட்டத்திலா? அதிமுக - பாஜக பொதுக்கூட்டத்திலா அதிக கூட்டம் கூடும் என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications