10 அமைச்சர்கள் ஜம்பாகிறாங்க... அவருகூட விசாரிச்சார்....இவரும்தான்....அடேங்கப்பா அதிமுக கிசுகிசுக்கள்
சென்னை: சசிகலா சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவதை முன்வைத்து அதிமுக, அமமுக வட்டாரங்களில் சுவாரசியமான கிசுகிசுக்கள்தான் ரெக்கை கட்டி பறக்கின்றன.
சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது இல்லை என்பது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு நிலைப்பாடு. ஆனால் ஓபிஎஸ் தரப்பு இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் அதிமுக, அமமுகவில் நொடிக்கு நொடி என்கிற வகையில் நெருங்கிய வட்டாரங்களிலும் சரி.. சமூக வலைதளங்களிலும் சரி.. ஏகப்பட்ட கிசுகிசுக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றன. அத்தனை கிசுகிசுக்களையும் பட்டியலிட்டால் தலை கிறுகிறுத்துவிடும்.

10 முதல் 17 அமைச்சர்களாம்
சசிகலாவை ஓசூர் எல்லையில் வரவேற்க இப்பவே 10 அமைச்சர்கள் ரெடியாக இருக்காங்க.. அந்த 10 பேரும் அப்பாயின்ட்மென்ட் கேட்டு வெயிட் பண்றாங்க.. இந்த 10 என்பது 17 ஆகவும் மாறும் என்பது அமமுகவின் உச்சகட்ட கிசுகிசு. அதேபோல் ஓபிஎஸ் தரப்பு ஓகே சொல்லியாச்சு.. எல்லாம் பேசி முடிச்சுட்டாங்க என்பது இன்னொரு கொசுறு உலா.

முதல்வர்- துணை முதல்வர்
அதேபோல் ஓபிஎஸ்தான் முதல்வர் வேட்பாளர்; டிடிவியார் துணை முதல்வர்.. இதுதான் டெல்லி விருப்பம். அதனால்தான் அண்ணன் அமைதியாக இருக்கிறார் என்பது அதிமுக- அமமுக இருதரப்பும் பகிர்ந்து கொள்ளும் செய்தி. சின்னம்மா ராயப்பேட்டை அலுவலகத்துக்கு போற அன்னைக்கு தெரிந்துவிடும்.. எதிர்க்க துணிவு உள்ளவங்க நேரில் வந்து எதிர்க்கட்டுமே என்கிற உதார் ஒருபக்கம்.

நம்ம எம்.எல்.ஏ.வுமாம்
இன்னொரு பக்கம், நம்ம எம்.எல்.ஏ. கூட அவருக்கு போன்போட்டு அந்த அம்மாவோட உடல்நலன் பற்றி விசாரிச்சாராம்.. அப்ப, நம்ம எம்.எல்.ஏ.வும் அணி தாவுறாரோ என சிலரை குறிவைத்து கிளப்பிவிடப்படுகிற கிசுகிசுக்களும் இதில் அடக்கம்.

கிசுகிசுக்களின் படையெடுப்புகள்
எந்த பக்கமும் சேராமல் நடப்பதை வேடிக்கை பார்க்கலாம்னு நினைச்சா நம்மை எல்லாம் கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கிறாங்களே என்கிற அங்கலாய்ப்பில் சில எம்.எல்.ஏக்கள். இன்னும் ஒருவாரத்துக்கு அதாவது சசிகலா வந்து சேரும் வரை எத்தனை வண்டி வண்டியாக கிசுகிசுக்கள் படையெடுக்கப் போகிறதோ? என்பதுதான் தெரியவில்லை.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications