மன அழுத்தத்திற்கு மாமருந்தாக வாய்த்தவர் எஸ்.பி.பி... தலைவர்களை கலங்க வைத்த மரணம்..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவு செய்தியறிந்து திரைத்துறை மட்டுமின்றி அரசியல் கட்சித் தலைவர்களும் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மீண்டு வருவார் பாலு என நம்பிக்கையோடு காத்திருந்த அவரது கோடான கோடி ரசிகர்கள் செய்தி தொலைக்காட்சிகள் முன்பு அமர்ந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உள்ளூர் தலைவர்கள் முதல் தேசியத் தலைவர்கள் வரை எஸ்.பி.பி. குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலும் ஆறுதலும் தெரிவித்துள்ளனர்.

அதன் விவரம் பின்வருமாறு;

முதலமைச்சர் ட்வீட்

''கோடிக்கணக்கான நெஞ்சங்களை தனது காந்தக்குரலால் கட்டிப்போட்ட பன்முக ஆளுமை எஸ்.பி.பி.''

''எஸ்.பி.பி .மறைவை பொறுத்தவரை திரைத்துறைக்கும் இசையுலகிற்கும் ஈடில்லா பேரிழப்பு''

ஸ்டாலின் ஆறுதல்

''பரபரப்பான உலகில், இயந்திரம் போல் மாறிவிட்ட மக்களின் மன அழுத்தத்திற்கு மாமருந்தாக வாய்த்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்''

''காலம் அவரை பிரித்தாலும் காற்றில் தவழ்ந்து கொண்டிருக்கிறது அவரது தேன் குரல் ; தம்பி சரண் உட்பட எஸ்.பி.பி. குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்''

ஓ.பி.எஸ். இரங்கல்

''எஸ்.பி.பி மறைந்தாலும் அவரது கானக்குரல் பாடல்கள் என்றுமே மறையாது ஒலித்துக்கொண்டு இருக்கும். அது அவரது பெருமைகளை நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.''

''தேமதுரக் குரல் கொண்டு இவ்வையகத்தை மகிழ்வித்தவர் எஸ்.பி.பி.''

கே.எஸ்.அழகிரி ஆறுதல்

கே.எஸ்.அழகிரி ஆறுதல்

''எஸ்.பி.பி. மரணச் செய்தி அறிந்து அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன், இன்னொரு எஸ்.பி.பி.யை எப்போது காணப்போகிறோம்? அவரது இடத்தை இனி யாரால் நிரப்ப முடியும்?''

எஸ்.பி.பி.யின் ரசிகர் பெருமக்களுக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் காங்கிரஸ் சார்பில் ஆறுதலும் அனுதாபமும் தெரிவித்துக் கொள்கிறேன்.''

ராமதாஸ் இரங்கல்

''பாடகர் எஸ்.பி.பி மறைந்தாலும் அவரது பாடல்கள் ஒலிக்கும் வரை அவர் மக்களிடம் வாழ்ந்து கொண்டிருப்பார்.''

''எஸ்.பி. பாலசுப்பிரமணியன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.''

ப.சிதம்பரம் உருக்கம்

''தேமதுரத் தமிழோசை ஓய்ந்தது; திரை உலகமும் இசை உலகமும் தமிழ் கூறும் ஒரு நல்லுலகமும் ஒரு மாபெரும் கலைஞனை இழந்துவிட்டன.''

''எஸ்.பி.பி. குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்''.

திருமா ஆறுதல்

''பாடகர் எஸ்.பி.பி மீளவில்லை. மரணம் அவரை நம்மிடமிருந்து பிரித்துவிட்டது. அவரது இழப்பு தமிழ்ச் சமூகத்துக்கு மட்டுமல்ல; மொழி,இனம், மதம்,தேசம் கடந்த யாவருக்கும் நேர்ந்த பேரிழப்பாகும்''

''எஸ்.பி.பி.யை இழந்து வாடும் யாவருக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்.''

டிடிவி தினகரன் பதிவு

எஸ்.பி.பியின் கானக்குரல் எவ்வளவு காலமானாலும் காற்றோடு கலந்திருக்கும் - வைகோ

''வசீகரமிக்க குரலால் மொழிகளை கடந்து மக்களின் நேசத்தை பெற்றவர் எஸ்.பி.பி. -தினகரன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+