சட்டசபையில் கள்ளக்குறிச்சி உயிரிழப்புகள்- கடும் அமளி- அதிமுக எம்எல்ஏக்கள் குண்டுகட்டாக வெளியேற்றம்!
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை முன்வைத்து அண்ணா திமுக எம்.எல்.ஏக்கள் கறுப்புச் சட்டையுடன் கடும் அமளியில் ஈடுபட்டனர். கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குறித்து விவாதிக்க கோரி சட்டசபை சபாநாயகர் அப்பாவு இருக்கை முன்பாகவும் அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டையே பதறவைத்துள்ளது கள்ளக்குறிச்சியின் மரண ஓலம். தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கள்ளக்குறிச்சிக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு ஏற்கனவே ரூ10 லட்சம் நிவாரண உதவி அறிவித்துள்ளது. இதற்கு தேமுதிக, நாம் தமிழர் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாஜகவும் ரூ1 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூடுதல் நிதி உதவி வழங்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் முதல் கடைநிலை போலீசார் வரை பல்வேறு தரப்பினர் மீது தமிழக அரசு அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடரின் 2-வது நாள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சட்டசபைக்கு கறுப்பு உடை அணிந்து அதிமுக, பாமக எம்.எல்.ஏக்கள் வருகை தந்தனர். சட்டசபை கூட்டம் தொடங்கியது கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து கள்ளக்குறிச்சி மரணங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அதிமுக எம்.எல்.ஏக்கள் சிலர் சபாநாயகர் இருக்கை முன்பாக பதாகைகளை பிடித்த படி முழக்கமிட்டனர். அப்போது சபை முன்னவர் துரைமுருகன் எழுந்து பேச முயற்சித்தார். அதற்கும் அதிமுக எம்.எல்.ஏக்கள் இடையூறு செய்தபடி அமளியில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மட்டும் பேசலாம் எனவும் சபாநாயகர் அப்பாவு அனுமதித்தார். ஆனாலும் அதிமுக எம்.எல்.ஏக்கள் இதனை ஏற்க மறுத்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களையும் சபையில் இருந்து உடனே வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். இதனடிப்படையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் சபையில் இருந்து குண்டுகட்டாக சபை காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். சபையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள், திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் பேசிய சபை முன்னவர் துரைமுருகன், அதிமுகவினர் நடவடிக்கையை விமர்சித்தார்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications