திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ்.. முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவாளர்களுடன் இணைந்தார்!
சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (OPS) இன்று திமுகவில் இணைந்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினை சந்திப்பதற்காக தி.நகரில் உள்ள ஹோட்டலில் இருந்து அண்ணா அறிவாலயத்திற்கு அமைச்சர் சேகர்பாபுவுடன் ஒரே காரில் வருகை தந்தார். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
அவரது மகன் ரவீந்திரநாத், உசிலம்பட்டி எம்.எல்.ஏ அய்யப்பன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களும் திமுகவில் இணைந்துள்ளனர். ஓபிஎஸ் திமுகவில் இணைந்து உள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதலமைச்சர் மு.க ஸ்டாலினை முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அண்மையில் தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளில் நேரில் சந்தித்துப் பேசினார். ஸ்டாலின் - ஓபிஎஸ் சந்திப்பை அடுத்து ஓபிஎஸ் திமுகவில் இணையப் போகிறாரா? என்ற கேள்வி எழுந்தது.
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக அவரை விட்டு விலகியதால் ஓபிஎஸ் முக்கிய முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிகார யுத்தம் நடத்திய நிலையில், சட்ட ரீதியாகவும், கட்சியிலும் அவர் பின்னடைவைச் சந்தித்தார். எனினும், பாஜகவை முழுமையாக நம்பி இருந்தார். எப்படியும் அதிமுகவில் இணைந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால் பாஜக, எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைத்து, ஓ.பன்னீர்செல்வத்தை கைவிட்டது.
சட்டசபை தேர்தல் தேதி நெருங்க நெருங்க, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் திமுகவுக்கு சென்றனர். கு.ப.கிருஷ்ணன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் தவெகவுக்கு சென்றனர். தர்மர் எம்.பி எடப்பாடி பழனிசாமியுடனே சென்று சேர்ந்துவிட்டார். பண்ருட்டி ராமச்சந்திரன், ஓ. பன்னீர்செல்வத்தின் அத்தியாயம் முடிந்துவிட்டது எனக் கூறி புதுக் கட்சி தொடங்கிவிட்டார்.
இந்நிலையில் தான் வேறு வழியின்றி, ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்து உள்ளார். அதனை உறுதி செய்யும் வகையில் அண்மையில், முதலமைசர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை தனது மகன் ரவீந்திரநாத் உடன் சென்று சந்தித்துப் பேசினார் ஓபிஎஸ். ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ அய்யப்பன், சட்டசபையில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று பேசினார்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இன்று திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயம் வருகை ந்தார். கோவையில் நடக்கும் திமுக மாநாட்டிற்கு முதல்வர் ஸ்டாலின் செல்வதற்கு முன்பாக ஓ.பன்னீர்செல்வம் இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து உள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ள நிலையில், தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்வார் என்றும் கூறப்படுகிறது. அதிமுகவில் 3 முறை முதலமைச்சராக இருந்தவர். ஓ.பன்னீர்செல்வம் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் திமுகவில் சேர்ந்து உள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஓபிஎஸ் ஆதரவாளரான உசிலம்பட்டி எம்.எல்.ஏ அய்யப்பனும் திமுகவில் இணைந்துள்ளார். முன்னாள் எம்.பியும் ஓபிஎஸ் மகனுமான ஓபி ரவீந்திரநாத் உள்ளிட்டோரும் திமுகவில் இணைந்து உள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினை சந்திப்பதற்காக தியாகராய நகரில் உள்ள ஹோட்டலில் இருந்து அண்ணா அறிவாலயத்திற்குப் புறப்பட்டார். அமைச்சர் சேகர்பாபுவுடன் ஒரே காரில் வருகை தந்தார் ஓபிஎஸ். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். அவரது மகன் ரவீந்திரநாத், உசிலம்பட்டி எம்.எல்.ஏஅய்யப்பன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களும் திமுகவில் இணைந்துள்ளனர். அவரது ஆதரவாளர்கள் அறிவாலயத்தில் திரண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
மதுரை தெற்கு தொகுதி.. புதூர் பூமிநாதன் vs ராம ஸ்ரீனிவாசன்.. பலம் என்ன? பலவீனம் என்ன? -
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு? -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
விஜய் கட்சியால் எந்த பாதிப்பும் இல்லை.. திமுகவின் வெற்றி பிரகாசமா இருக்கு.. நேரடியாக சொன்ன சபரீசன்! -
வில்லிவாக்கம் தொகுதி திமுக பொறுப்பாளர்கள் கூட்டத்தில், மனைவியுடன் பங்கேற்ற ஸ்டாலின் மருமகன் சபரீசன் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
மதுரைக்குள் நுழைந்த சுந்தர் சி.. இதுக்காகத்தான் இங்கே வந்தேன்.. பிடிஆருக்கு சவால் விடறாரே?












Click it and Unblock the Notifications