தெலுங்கானாவின் முதல் பெண் ஆளுநர் தமிழிசை.. ஸ்டாலின், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் வாழ்த்து!
Recommended Video
சென்னை: தமிழிசை சௌந்திரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து தமிழக அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் வரவேற்பு அளிக்கின்றனர். மேலும் தமிழிசை நியமனம் தமிழகத்துக்கு பெருமையாகவே கருதுகின்றனர்.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்திரராஜன் தற்போது தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்திலிருந்து, தெலங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்கும் அன்புச் சகோதரி @DrTamilisaiBJP அவர்களுக்கு வாழ்த்துகள்!
— M.K.Stalin (@mkstalin) September 1, 2019
அடித்தட்டு மக்களின் நலனுக்காகப் பாடுபட்டு, இந்திய அரசியல் சட்டத்தின் மாண்புகளை எந்நாளும் அவர் பாதுகாப்பார் என பெரிதும் நம்புகிறேன். https://t.co/kItr919Ux2
இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்திலிருந்து, தெலுங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்கும் அன்புச் சகோதரி @DrTamilisaiBJP அவர்களுக்கு வாழ்த்துகள்!
அடித்தட்டு மக்களின் நலனுக்காகப் பாடுபட்டு, இந்திய அரசியல் சட்டத்தின் மாண்புகளை எந்நாளும் அவர் பாதுகாப்பார் என பெரிதும் நம்புகிறேன் என்றார்.
இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில்
தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தைச் சேர்ந்த அவருக்கு இப்பதவி அளிக்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி. #tamilisai
— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 1, 2019
தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தைச் சேர்ந்த அவருக்கு இப்பதவி அளிக்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி என்றார்.
இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறுகையில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அன்பு மகள் என்று எப்பொழுதும் என்னால் அழைக்கப்படும் (திரு. குமரி அனந்தன் அண்ணாமலைப் பல்கலைக் கழக எனது சக மாணவத் தோழர்) டாக்டர் தமிழிசை தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள் என்றார்.
ஒரு தமிழ்ப்பெண்மணி ஆளுநராவது பெருமிதம் தருகிறது. தமிழுக்கும் தெலுங்குக்கும் இசை பாலமாகத் திகழும் என்று நம்புகிறேன்; தமிழிசையை @DrTamilisaiBJP வாழ்த்துகிறேன்.
— வைரமுத்து (@vairamuthu) September 1, 2019
ஒரு தமிழ்ப்பெண்மணி ஆளுநராவது பெருமிதம் தருகிறது. தமிழுக்கும் தெலுங்குக்கும் இசை பாலமாகத் திகழும் என்று நம்புகிறேன்; தமிழிசையை @DrTamilisaiBJP வாழ்த்துகிறேன் என கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.
தூத்துக்குடி எம்பி கனிமொழி, திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், எம்பி பாரிவேந்தர் உள்ளிட்டோரும் தமிழிசைக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications