Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 ஆண்டுகளுக்கு முன்பே மாட்டினோம்.. போலீஸ் விசாரிக்கவில்லை.. பொள்ளாச்சி கேங் பரபர வாக்குமூலம்!

பொள்ளாச்சியில் பாலியல் குற்றங்களை செய்த கும்பல் இரண்டு வருடங்களுக்கு முன்பே போலீசில் சிக்கி தப்பித்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Pollachi News: அப்பாவி பெண்கள் இந்த கும்பலிடம் சிக்கியது எப்படி?.. பரபர தகவல்- வீடியோ

    சென்னை: பொள்ளாச்சியில் பாலியல் குற்றங்களை செய்த கும்பல் இரண்டு வருடங்களுக்கு முன்பே போலீசில் சிக்கி தப்பித்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    பொள்ளாச்சி பாலியல் குற்றங்கள் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. நாளுக்கு நாள் இது குறித்து வெளியாகும் உண்மைகள் மனதை பதைபதைக்க வைக்கிறது.

    இரண்டு நாட்கள் முன் வெளியான வீடியோ காரணமாக பொள்ளாச்சி பாலியல் வழக்கு விஸ்வரூபம் எடுத்து உள்ளது.மொத்தம் 253க்கும் அதிகமான பெண்கள் இது போல பாலியல் துன்பத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    அப்போதே

    அப்போதே

    இந்த கேங் இரண்டு வருடங்களுக்கு முன்பே போலீசில் ஒருமுறை சிக்கி இருக்கிறார்கள். பெண் ஒருவரை ஏமாற்றி அவர் போலீசில் புகார் அளித்து உள்ளார். ஆனால் அப்போது போலீஸ் இவர்களை சரியாக விசாரிக்கவில்லை என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அப்போது எஸ்கேப் ஆன இவர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களை செய்து வந்து இருக்கிறார்கள்.

    வாக்குமூலம்

    வாக்குமூலம்

    இது குறித்து இந்த பொள்ளாச்சி கேங் போலீஸ் வாக்குமூலத்தில் தகவல் தெரிவித்து இருக்கிறது. போலீஸ் வாக்குமூலத்தில் அவர்கள் ஏமாற்றிய பெண்கள் குறித்த தகவல்களை வாக்குமூலம் அளித்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் போலீஸ் பாதிக்கப்பட்ட பெண்களிடம் ரகசியமாக விசாரணை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

    பெண் மருத்துவர்

    பெண் மருத்துவர்

    இந்த கேங் பெண் மருத்துவர் ஒருவரை சென்னையில் ஏமாற்றியது விசாரணையில் அம்பலம் ஆகி உள்ளது. அந்த பெண் மருத்துவரிடம் இவர்கள் பல லட்சம் மிரட்டி வாங்கி இருக்கிறார்கள் என்றும் பரபர தகவல்கள் வந்துள்ளது. இதுகுறித்துதான் அந்த பெண் மருத்துவர் போலீசில் புகார் அளித்து உள்ளார். ஆனால் இரண்டு வருடம் முன்பு கொடுத்த இந்த புகாரில் அப்போது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    ஆனால் இல்லை

    ஆனால் இல்லை

    சரியான ஆதாரம் இல்லை என்று இவர்கள் எஸ்கேப் ஆகி உள்ளனர். இதுகுறித்துதான் தற்போது இவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் அந்த பெண்ணிடம் புகார் வாங்க போலீசார் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. சிபிஐ இந்த வழக்கை கையில் எடுக்க உள்ள நிலையில் இந்த வாக்குமூலம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+