டெல்லியில் கெத்து காட்டும் பாஜக.. ஆட்சியை இழக்கும் ஆம் ஆத்மி.. கருத்து கணிப்பில் காங்கிரஸ் பரிதாபம்
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை பிடிக்கும். ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக அரியணை ஏறும் என்று Pollster கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
டெல்லி சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வாக்காளர்கள் வரிசையில் நின்று ஓட்டளித்தனர். மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றது.

இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் பிப்ரவரி 8 ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. டெல்லியை பொறுத்தவரை மொத்தம் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 36 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
டெல்லியில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே போட்டி உள்ளது. தேர்தல் முடிவடைந்துள்ளதை தொடர்ந்து இன்று மாலை 6.30 மணிக்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் முடிவுகள் வெளியாகி வருகின்றன.
அதன்படி டெல்லியில் பாஜக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் என்று pollster கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. டெல்லி தேர்தலில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக 36 முதல் 44 தொகுதிகளில் வெல்லும் எனவும், ஆம் ஆத்மி 26-34 இடங்களில் வெல்ல வாய்ப்பு என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என்று போல்ஸ்டர் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் செல்வாக்கு சரிந்துள்ள வேயைில் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக இந்த கருத்து கணிப்பு கூறியுள்ளது. அதேபோல் தொடர்ந்து 3 முறை ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி இந்த முறை பாஜகவிடம் சறுக்கலை சந்திக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இதற்கு முன்பு தொடர்ந்து 3 முறை ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தது. கடந்த 2014, 2015, 2020 ஆகிய சட்டசபை தேர்தல்களில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதில் 2014ல் மட்டும் பாஜக - ஆம் ஆத்மி கூட்டணி அமைத்து இருந்தது. ஆனால் அந்த ஆட்சி உடனடியாக கவிழ்ந்தது. அதன்பிறகு 2015, 2020 சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தது. இப்போது மீண்டும் சட்டசபை தேர்தல் நடந்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications