"சிலைக் கடத்தல் மன்னன் தீனதயாளனுடன் தொடர்பா?" வந்து விழுந்த கேள்வி! ஒருமையில் பேசிய பொன் மாணிக்கவேல்
சென்னை: ஓய்வு பெற்ற தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேலிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்த நிலையில், அப்போது செய்தியாளர்கள் கேட்ட ஒரு கேள்விக்கு அவர் திடீரென ஆவேசமானார். இது குறித்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்து ஓய்வு பெற்றவர் பொன். மாணிக்கவேல். இவர் ஓய்வு பெறும் முன்பு தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் டிஐஜி ஆக இருந்த இவர் பிறகு ஐஜி ஆகவும், சிறப்பு அதிகாரியாகவும் பணியாற்றி இருக்கிறார்.

பொன் மாணிக்கவேல்: நேற்றைய தினம் சென்னை பாலவாக்கம் பகுதியில் உள்ள இவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக இருந்த போது, அதே பிரிவில் இருந்த காதர் பாட்ஷா என்பவர் சிலை கடத்தல்காரர்களுடன் சேர்ந்து சதியில் ஈடுபட்டதாகக் கூறி வழக்குப் பதிவு செய்தார்.
அது தொடர்பாக காதர் பாட்ஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை தொடர்பாக சிபிஐ பொன். மாணிக்கவேலிடம் விசாரித்தனர். இந்த விசாரணை சுமார் 7 மணி நேரம் வரை நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பொன் மாணிக்கவேல் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். இதை ரெய்டு எனக் குறிப்பிட முடியாது.. நீதிமன்ற அறிவுறுத்தல்படி விசாரணைக்கு மட்டுமே வந்துள்ளனர் என விளக்கமளித்தார்.
பேட்டி: அப்போது உங்களுக்கும் சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுடன் தொடர்பு என்ற பேச்சு எழுந்துள்ளதே அது குறித்து விசாரித்தார்களா எனச் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல், "இங்கே நாம் அனைவரையும் விட, விசாரணை அதிகாரிகள் சிபிஐ அமைப்பை விட சென்னை ஐகோர்ட் தான் மேலானது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என் மீது தவறு இல்லை எனத் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி இப்போது சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக இருக்கிறார். அந்தளவுக்கு நேர்மையான ஒரு நீதிபதி. அடுத்து இதே வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்ட போது தீர்ப்பு வழங்கப்படும் நேரத்தில் சரியாக இந்த வழக்கை எல்லாம் சிபிஐக்கு மாற்றுவதாக உத்தரவிட்டனர்.
நீதிமன்றம் தான் மேலானது: எல்லா கிரிமினல்களும் சேர்ந்து அரசுக்கு அழுத்தம் கொடுத்தே இந்த 100+ வழக்குகளை சிபிஐக்கு மாற்றினார்கள். இதற்கான அரசாணையையும் வெளியிட்டார்கள். ஆனால், அந்த அரசாணை செல்லாது என்று அந்த நீதிபதி உத்தரவிட்டார். நான் ஓய்வு பெறப் போகும் நேரத்தில் எனக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பும் வழங்கினார்கள். அப்போ அவர்கள் எல்லாம் யார். போலீஸ் அதிகாரிகள் இப்படியும் விசாரிப்பார்கள்.. அப்படியும் விசாரிப்பார்கள்.. நீதிமன்றத்தைத் தான் நாம் மதிக்க வேண்டும்" என்றார்.
சிக்கும் பொன் மாணிக்கவேல்.. 13 பிரிவுகளில் சிபிஐ வழக்குப்பதிவு! விஸ்வரூபம் எடுக்கும் சிலை கடத்தல்!
அப்போது செய்தியாளர் ஒருவர் நீங்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளதே எனக் கேட்டார். அதற்குப் பொன் மாணிக்கவேல், "இது டெக்னிக்கல் மேட்டர்.. இதற்கு ஒத்துழைப்பு தருகிறேன். தரவில்லை என்றால் என்ன அர்த்தம்" என்றார்.
ஆவேசம்: அப்போது செய்தியாளர் குறுக்கிட முயன்ற போது பொன் மாணிக்கவேல், "சொல்றத கேளு முதல்ல" என ஒருமையில் பேசினார். மேலும், "ஒத்துழைப்பு எல்லாம் கிடையாது. என்னிடம் வந்தால் நான் ஏகப்பட்ட டாக்குமெண்டுகளை விட்டெறிவேன். விசாரிக்கிறேன் என வந்தால்.. நான் டாக்குமெண்டுகளை அள்ளி அள்ளி வீசுவேன். அவர்களிடம் இல்லாத ஆவணங்களை நான் தான் கொடுக்கிறேன்" என்றார்.. செய்தியாளர்கள் மற்றொரு கேள்வியைக் கேட்க முயன்றபோது, "ஏய் சும்மா எதையாவது சொல்லக் கூடாது" என்றும் அவர் கோபமடைந்தார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications