"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!
சென்னை: தேர்தல் சமயத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யை, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 'செல்லப்பிள்ளை' என்று விசிக தலைவர் திருமாவளவன் கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனால், இப்போது அதே விஜய்யின் அமைச்சரவையில் விசிக இடம் பிடித்துள்ளதைச் சுட்டிக்காட்டி பாஜக முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், திருமாவளவனை கடுமையாக விமர்சித்துள்ளார்.
"விஜய்யை ஆர்.எஸ்.எஸ்-ன் செல்லப்பிள்ளை என்று முன்பு திருமாவளவன் கூறிவந்தார். ஆனால் இப்போது அதே விஜய் அரசின் அமைச்சரவையில் விசிக இடம் பெற்றுள்ளதால், திருமாவளவனை அனைவரும் ஆர்.எஸ்.எஸ்-ன் 'பேரப்பிள்ளையாகவே' பார்க்கத் தொடங்கியுள்ளனர்!" என்று அதிரடி வெடியைக் கொளுத்தியுள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன்.

குதிரை பேரம் அல்ல... கழுதை பேரம்
சமீபகாலமாக நிலவி வரும் அரசியல் நகர்வுகள் குறித்துப் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், "தமிழக வெற்றிக் கழகம் தற்போது நடத்துவது ஒன்றும் குதிரை பேர அரசியல் அல்ல, அது வெறும் கழுதை பேர அரசியல். சட்டமன்ற உறுப்பினர்கள் குதிரைகளாக அல்லாமல், கழுதைகளாக விலை பேசப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை இப்படி ஒரு கேவலமான நிலை வந்ததே இல்லை" என்று விமர்சித்துள்ளார்.
மேலும், "பெண்களும் இளைஞர்களும் பெரும் மாறுதலை எதிர்பார்த்துதான் இந்த ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்தார்கள். ஆனால், முந்தைய ஆட்சியாளர்களின் நீட்சியாக தான் தவெக அரசைப் பார்க்க முடிகிறதே தவிர, புதிய எழுச்சியாக இல்லை" என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
ஆரம்பமே தவறு
மேலும் பேசிய அவர், "தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதில் தமிழக முதல்வரை விடப் பிரதமர் மோடிக்குத் தான் அதிக அக்கறை உள்ளது. பிரதமர் கொடுக்கும் நல்ல திட்டங்களைச் சரியாக நடைமுறைப்படுத்துவேன் என்று முதல்வர் விஜய் அவரிடம் உறுதி அளிக்க வேண்டும். புதிய அரசு எடுத்தவுடனேயே தவறு செய்யத் தொடங்கிவிட்டது. கொடுமையான சம்பவங்கள் நடக்கும்போது அரசு அதைச் சமாளிக்கப் பார்க்கக் கூடாது. மக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
அவர்களே சரிசெய்து கொள்வார்கள்
அதிமுகவில் நிலவி வரும் தற்போதைய உட்கட்சிப் பூசல்கள் மற்றும் அணிகள் இணைப்பு குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, "அதிமுக என்பது பல சவால்களைச் சந்தித்து வந்த ஒரு பாரம்பரியமிக்க கட்சி. எனவே, அவர்களது பிரச்சனைகளை அவர்களே சரி செய்து கொள்வார்கள். அதில் எங்களுடைய வழிகாட்டுதல் ஏதும் தேவைப்படாது என்பதை நாங்கள் முழுமையாக நம்புகிறோம்" என்று கூறியுள்ளார்.
தவெக அரசு தொடர்வது நல்லது
"இந்த தவெக அரசு 5 ஆண்டுகள் தொடர்வது நல்லது தான். ஆனால், கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து தளர்ந்து போனால், மக்கள் இந்த அரசைத் தூக்கி எறியவும் தயங்க மாட்டார்கள் என்பதை ஆட்சியாளர்கள் எச்சரிக்கை மணியாகக் கருத வேண்டும்" என்று கூறி யுள்ளார் பொன்னார்.
-
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
“தவெக ஆச்சரியக்குறிகளே.. விஜய்யை தலைவராக வச்சுக்கிட்டு எதுக்கு இதெல்லாம்?” அதிமுக காட்டமான பதிலடி -
தவெகவில் இணைந்த நடிகர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் நிழலாகவே பயணித்தவர்.. அதிமுகவில் இருந்து ஜூட்! -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
செத்த பாம்பை அடித்த எடப்பாடி.. 3 எம்எல்ஏ எஸ்கேப்! கெஜட்டிலேயே வந்தாச்சு! இப்போ பேசி என்ன பிரயோஜனம்? -
தவெகவில் புதிய அதிகார மையம்.. கூடுதல் பவரோடு ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த்.. கவனிச்சீங்களா? -
மாணவர்களுக்கு குட் நியூஸ்! ஜூன் 4ல் புத்தகம், சீருடை வழங்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு! -
செங் இஸ் கிங்.. பாஜக பாலிடிக்ஸை கையிலெடுத்த விஜய்! அலறும் கூட்டணி கட்சிகள்! கன் மாதிரி நிற்கும் தவெக -
"3 எம்.எல்.ஏக்களின் பதவி விலகலை 5 நிமிடத்தில் ஏற்றது ஏன்?” சபாநாயகருக்கு அதிமுக MP இன்பதுரை கேள்வி! -
ரூ.1 லட்சம் மாமூல்.. செங்கல்சூளை உரிமையாளரை மிரட்டி தவெக நிர்வாகிக்கு நேர்ந்த கதி.. அதிரடி நீக்கம்












Click it and Unblock the Notifications