வைகோ சவாலை ஏற்க தயார்.. பொன்.ராதாகிருஷ்ணன் பதில் சவால்
Recommended Video

சென்னை: வைகோ சவாலை ஏற்க தயார் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு பிரதமர் வருகை தந்தால், கருப்பு கொடி காட்டுவோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். இதுகுறித்து கோவையில் நிருபர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
மிகப்பெரிய சதிச் செயல் தனக்கு எதிராக நடத்தப்பட்டதை கண்டித்து திமுகவிலிருந்து வெளியேறியவர் வைகோ.

சதி செயல்
சதிச்செயல் செய்தவர்களை அரசியலில் இருந்து ஓய்வுபெற வைக்க சபதம் புரிந்து, தமிழகத்தை காப்பாற்ற போகிறேன் என்றுதான் மதிமுகவை உருவாக்கினார். இன்று என்ன நிலை உருவாகி உள்ளது என அவருக்கு தான் தெரியும். எந்த தீய சக்திக்கு எதிராக போராடுவேன் என வெளியே வந்தாரோ, அந்த தீய சக்திக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்க இறங்கி உள்ளார். வைகோ மீதான நம்பகத்தன்மையை இது கேள்விக்குறியாகவும், கேலிக்குறியதாகவும் மாற்றியுள்ளது.

அரசியல் ஆதாயம்
பிரதமரை தமிழகத்திற்குள் அனுமதிக்க மாட்டோம் என்பதும் கருப்புக்கொடி காட்டுவோம் என்ற வார்த்தைகளை பயன்படுத்தியிருப்பதும் சிலரை திருப்திப்படுத்துவதற்காகவும், தான் சார்ந்திருக்கக்கூடிய கட்சிக்கு சில அரசியல் ரீதியான ஆதாயங்களை தேடுவதற்காக மட்டும் என்றே நான் கருதுகிறேன்.

மோடி வருவார்
எதற்காக அவர் சொல்லியிருந்தாலும் கூட, இந்த சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன். பிரதமர் தமிழ்நாட்டிற்கு வருவார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வார். தொடர்ந்து தமிழகத்திற்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களை தருவார். எந்தவித போராட்டத்தையும் எதிர்கொள்ள நாங்கள் தயார்.

அவமானப்படுத்த கூடாது
தேவையற்ற முறையில் வார்த்தைகளை கூற வேண்டாம் என நான் வேண்டுகோள் வைக்கிறேன். யாரையோ திருப்திபடுத்த, யாரையாவது அவமானப்படுத்த வேண்டாம். அது தமிழகத்தில் நடக்காது. இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications