ரஜினி மட்டுமில்லை.. நானும் சொல்கிறேன்.. தமிழகத்தில் மிகப் பெரிய வெற்றிடம் இருக்கு.. பொன்னார்
சென்னை: தமிழகத்தில் மிகப் பெரிய வெற்றிடம் இருப்பதாக ரஜினி மட்டுமல்ல, நானும் சொல்கிறேன் என மத்திய முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த வெள்ளிக்கிழமை இயக்குநர் சிகரம் கே பாலசந்தரின் சிலை திறப்பு விழாவுக்கு சென்றுவிட்டு போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அவர் கூறுகையில் தமிழகத்தில் ஆளுமையான திறமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது என்றார். இதை அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் மறுத்து வருகின்றன.
இந்த நிலையில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தி நகரில் இன்று சந்தித்தார். அவர் கூறுகையில் தமிழகத்தில் மிகப் பெரிய வெற்றிடம் இருக்கிறது என ரஜினி மட்டுமில்லை. நானும் சொல்கிறேன்.
ஆளுமைமிக்க கருணாநிதி, ஜெயலலிதா போல் தற்போதைய தலைவர்கள் யாரும் இல்லை. முரசொலி இடம் யாருக்கு சொந்தம் என்று அதிகாரிகளைக் கொண்டு முதல்வர் வெளிப்படையாக காண்பிக்க வேண்டும். பஞ்சமி நிலம் வைத்திருப்பதை போன்ற பெரும் பாவச் செயல் வேறு ஏதும் இல்லை என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications