முருகன் வீட்டில் நாளை பொங்கல் விழா.. வேட்டி சட்டையுடன் மோடி? மத்திய அமைச்சரின் டெல்லி வீடு கோலாகலம்
சென்னை: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் இல்லம் வெகு ஜோராக மின்னி கொண்டிருக்கிறது.. கரும்பு, மஞ்சள், வாழை மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு தமிழகக் கிராமிய மணம் கமழும் வகையில் தயார் செய்யப்பட்டு வருகிறது... நாளைய தினம் பொங்கல் விழா கொண்டாட உள்ள நிலையில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறையின் இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் தமிழர்களின் பாரம்பரியம் மாறாமல் பொங்கல் விழாவை கொண்டாடி வருகிறார். 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற நோக்கத்தின் அடிப்படையில் நடைபெறும் இந்த விழாவில் முக்கிய தலைவர்கள் கலந்துகொள்வது வழக்கமாக உள்ளது.

பொங்கல் பண்டிகை
அந்தவகையில் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் வியாழக்கிழமை முதல் கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு வரும் புதன்கிழமையில் டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டெல்லியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றது பலரது கவனத்தையும் பெற்றிருந்தது..
எல் முருகன் இல்லம்
அதற்கு முந்தைய ஆண்டு 2024 ஆம் ஆண்டு டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் வேட்டி சட்டையுடன் பங்கேற்ற பிரதமர் மோடி திருக்குறள் ஒன்றை மேற்கோள் காட்டியிருந்ததும் தமிழக மக்களை ஈர்க்க செய்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் விழாவில் பிரதமருடன் இணைந்து துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
நாளை 14 ம் தேதி புதன்கிழமையில் நடைபெறவுள்ள இந்தப் பொங்கல் விழாவிற்காக எல். முருகன் இல்லம் கரும்பு, மஞ்சள், வாழை, தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு தமிழக கிராமிய மணம் கமழும் வகையில் தயாராகி வருகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் பங்கேற்று மண்பானையில் பொங்கலிடும் நிகழ்வைப் பார்வையிட உள்ளார்.
தமிழர்களின் வீரக் கலைகளான சிலம்பாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகளுக்கும் இவ்விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நயினார் நாகேந்திரன், பிரதமர் மோடி
மேலும் டெல்லியில் எல். முருகன் இல்லத்தில் நாளை நடைபெறும் விழாவில் பங்கேற்க தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி செல்கிறார். இந்த விழா தமிழர் பண்பாட்டையும் தேசிய ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன...
அதுமட்டுமல்ல. டெல்லியில் வாழும் தமிழர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பொங்கல் மரபுகளை நேரில் காண உள்ளனர். பாரம்பரிய உணவுகள் பரிமாறப்படுவதுடன் விவசாயிகளின் உழைப்பை போற்றும் கருத்துகளும் எடுத்துரைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தேசிய அளவில் மேலும் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விழா பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஊடகங்கள் இந்த நிகழ்வை விரிவாக செய்தியாக வெளியிட உள்ளன. இதனால் பொதுமக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications