பொங்கலுக்கு ஊர் போக டிக்கெட் கிடைக்கலயா? சென்னை டூ மதுரைக்கு இன்று மெமு ரயில்.. ரயில்வே சர்ப்பிரைஸ்
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக சென்னையில் இருந்து மதுரைக்கு இன்று முன்பதிவு இல்லாத ஒன்வே ஸ்பெஷல் ரயில் இயக்கப்படுகிறது. இதேபோன்று சென்னையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு திருச்சி, மதுரை, கோவில்பட்டி, நெல்லை, நாகர்கோவில் வழியாக ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி 6 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. சென்னையில் உள்ள மக்கள் பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்கு படையெடுப்பது வழக்கம். சொந்த ஊர்கள் செல்லும் மக்களின் முதல் தேர்வு ரயில் ஆகும். இதனால் பண்டிகை காலங்களில் ரயில் நிலையம் பரபரப்பாகவே காணப்படும்.

கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் சென்னையில் வசித்து வருகிறார்கள். பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களிலும் சொந்த ஊர்களில் நடைபெறும் திருவிழா நாட்களிலும் இந்த மக்கள் ஊருக்கு செல்வது வழக்கம். இதனால் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்களிலும், ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதும்.
பொங்கல் பண்டிகை
அதிலும் பொங்கல் பண்டிகையை பற்றி சொல்லவே தேவையில்லை. சென்னையில் இருந்து பல லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று விடுவார்கள். இதனால், சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளிலும் ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதும்.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை நாளை (14 ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது. அதனைத்தொடர்ந்து மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை தினம் வருவதால், பொங்கல் பண்டிகையை சொந்த ஊருக்கு சென்று கொண்டாடுவதற்காக , நேற்று முன்தினம் முதல் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று வருகிறார்கள்.
சென்னை டூ மதுரைக்கு சிறப்பு ரயில்
இதனால் பஸ்-ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி, தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளையும் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படுகிறது. அதேபோல தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு ஒரு நாளே உள்ள நிலையில் பஸ்-ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகின்றன.
குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் உட்கார கூட இடமின்றி கூட்டம் காணப்படுகிறது. ஒவ்வொரு ரயிலிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனை கருத்தில் கொண்டு சென்னை டூ மதுரைக்கு முன்பதிவு இல்லா சிறப்பு ரயிலை தெற்கு ரயிலை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே கூறியிருப்பதாவது:-
எத்தனை மணிக்கு புறப்படும்?
பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக சென்னையில் இருந்து மதுரைக்க்கு முன்பதிவு இல்லாத ஒன்வே ஸ்பெஷல் ரயில் இயக்கப்படுகிறது. வண்டி எண் 06161- சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு மெமு எக்ஸ்பிரஸ் இயக்கப்படும். இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து இன்று பிற்பகல் 2.15 மணிக்கு கிளம்பும். தாம்பரம் ரயில் நிலையத்திற்கு 2.43 மணிக்கு வரும் ரயில் 2 நிமிடங்கள் நின்று செல்லும்.
நின்று செல்லும் ரயில் நிலையங்கள்:
செங்கல்பட்டு ((3.15/ 3.17- வரும் நேரம்/கிளம்பும் நேரம்), மேல்மருவத்தூர் (3.43/3.45) , திண்டிவனம் (4.15/4.17), விழுப்புரம் (4.55/5.00), விருதாச்சலம்(6.30/6.32), அரியலூர் (7.08/07.10), ஸ்ரீரங்கம் (8.05/8.07) வழியாக திருச்சிக்கு இரவு 9 மணிக்கு வந்து சேரும். பின்னர் மணப்பாறைக்கு 9.33 மணிக்கு வரும் இந்த ரயில் 9.35 மணிக்கு புறப்பட்டு செல்லும். திண்டுக்கல் (10.27/10.30), சோழவந்தான் (11.08/11.10) கூடல் நகர் (11.28/11.30) வழியாக மதுரைக்கு நள்ளிரவு 12.30 மண்ணிக்கு வந்து சேரும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை - திருவனந்தபுரம் சிறப்பு ரயில்
அதேபோல, சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ஒரு சிறப்பு ரயிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.45 மணிக்கு இன்று கிளம்பும். தாம்பரத்திற்கு நள்ளிரவு 12.35 மணிக்கு வந்து இரண்டு நிமிடங்கள் நின்று செல்லும். மேல் மருவத்தூர், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர் வழியாக திருச்சிக்கு அதிகாலை 5 மணிக்கு வந்து சேரும். திருச்சியில் இருந்து 5.15 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் திண்டுக்கல், கொடை ரோடு வழியக மதுரைக்கு காலை7.30 மணிக்கு வரும்.
இரண்டு நிமிடங்கள் மட்டுமே மதுரையில் நிற்கும் இந்த ரயில் மதுரையில் இருந்து 7.32 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக நெல்லைக்கு செவ்வாய்க்கிழமை காலை 10. 03 க்கு வந்து சேரும். நெல்லையில் இருந்து 10.13 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் வள்ளியூர், நாகர்கோவில் (11.30/11.32) வழியாக திருவனந்தபுரத்திற்கு 12.40 மணிக்கு சென்றடையும். திருவனந்தபுரம் கொச்சுவேலிக்கு பிற்பகல் 2 மணிக்கு சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications