Pongal Special Train: கோவை - சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்.. ரயில்வேயின் சூப்பர் அறிவிப்பு
சென்னை: தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான தைப்பொங்கல் பண்டிகை வரும் 15 ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு ஏராளமானோர் பேருந்து, ரயில்களில் செல்வது வழக்கம். பொதுமக்கள் சிரமமின்றி சென்று வரும் வகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை - சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
இதுதொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோவையில் இருந்து ஜனவரி 11, 18 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11.30 மணிக்குப் புறப்படும் கோவை - சென்னை விரைவு ரயில் (எண்: 06034) மறுநாள் காலை 9.50 மணிக்கு சென்னை நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக, சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து ஜனவரி 12, 19 ஆகிய திங்கள்கிழமைகளில் இரவு 11.25 மணிக்குப் புறப்படும் சென்னை - கோவை விரைவு ரயில் (எண்: 06033) மறுநாள் காலை 9 மணிக்கு கோவை நிலையத்தை வந்தடையும். இந்த ரயிலானது திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.
போத்தனூரில் இருந்து ஜனவரி 13, 20 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் இரவு 12.35 மணிக்குப் புறப்படும் போத்தனூா் - சென்னை சிறப்பு ரயில் (எண்: 06024) மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை நிலையத்தைச் சென்றடையும்.
சென்னையில் இருந்து ஜனவரி 14, 21 ஆகிய புதன்கிழமைகளில் பிற்பகல் 1.50 மணிக்குப் புறப்படும் சென்னை - போத்தனூா் சிறப்பு ரயில் (எண்: 06023) இரவு 11.15 மணிக்கு போத்தனூா் நிலையத்தை வந்தடையும். இந்த ரயிலானது திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.
கா்நாடக மாநிலம், மங்களூரில் இருந்து ஜனவரி 13-ஆம் தேதி அதிகாலை 3.10 மணிக்குப் புறப்படும் மங்களூரு - சென்னை சிறப்பு ரயில் (எண்: 06126) அன்று இரவு 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தைச் சென்றடையும். மறுமாா்க்கமாக, சென்னையில் இருந்து ஜனவரி 14-ஆம் தேதி காலை 4.15 மணிக்குப் புறப்படும் சென்னை - மங்களூரு சிறப்பு ரயில் (எண்: 06125) இரவு 11.30 மணிக்கு மங்களூரு நிலையத்தை வந்தடையும்.
இந்த ரயிலானது காசா்கோடு, கண்ணூா், கோழிக்கோடு, திரூா், ஷொரணூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும். செங்கோட்டை - போத்தனூா் இடையே சிறப்பு ரயில்: செங்கோட்டையில் இருந்து ஜனவரி 14-ஆம் தேதி இரவு 8.45 மணிக்குப் புறப்படும் செங்கோட்டை - போத்தனூா் சிறப்பு ரயில் (எண்: 06026) மறுநாள் இரவு 7.30 மணிக்கு போத்தனூா் நிலையத்தை வந்தடையும்.
இந்த ரயிலானது தென்காசி, கடையநல்லூா், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூா், சிவகாசி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூா், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூா், பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications