பொங்கல் பரிசு 3000 உறுதி? பொதுமக்கள் அறிய வேண்டியவை.. கோட்டையில் நடப்பது என்ன?
சென்னை: வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவை வழங்க உள்ளன. அதோடு ரொக்கப்பணமும் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அது ரூபாய் ஆயிரமா?, ரூ.2 ஆயிரமா?, ரூ.3 ஆயிரமா அல்லது ஏன் ரூ.5 ஆயிரமாக கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் கோட்டையில் நடப்பது என்ன? அரசு எப்போது முதல் இதற்கான பணிகளில் இறங்கும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் இந்தாண்டு அனைத்து ரேஷன்கார்டு தாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன், ரொக்கம் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.. அதற்கான டோக்கன் வினியோகம், அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. எனினும் ரொக்கம் எவ்வளவு வழங்கப்படும் என்பது குறித்து அரசு இன்னும் அறிவிக்கவில்லை.. எதிர்க்கட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோரிக்கையை வைத்துவருகின்றன. மறுபக்கம் நிதி நிலையும் உள்ளதா என்பதையும் அரசு ஆராய்ந்து வருகிறது. கோட்டையில் நடப்பது குறித்து பார்ப்போம்.

பொங்கல் பண்டிகை திருவிழா
தமிழர்களின் பண்டிகையான பொங்கல் திருநாள், மிகப்பெரிய உற்சாகத்துடன் குக்கிராமங்கள் தொடங்கி நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். பொங்கல் போன்ற பெரிய பண்டிகை தமிழ்நாட்டில் கிடையாது. தீபாவளி பண்டிகையைவிடவும் பொங்கலைத்தான் மக்கள் வெகு சிறப்பாக சொந்த ஊர் சென்று கொண்டாடுவார்கள்.
4 நாட்கள் திருவிழா
பொங்கலுக்கு முதல் நாள் பழைய பொருட்களை கழித்து போகி கொண்டாடுவார்கள். அடுத்து பொங்கல் அன்று பொங்கல் வைத்து சூரியனுக்கு நன்றி சொல்லி வழிபடுவார்கள். விவசாயத்திற்கு காரணமான கால்நடைகளுக்கும் ஒருநாள் திருவிழா கொண்டாடுவார்கள். ஊர் ஊராக மூன்றாம் நாள் சென்று காணும் பொங்கல் கொண்டாடுவார்கள். திருவிழாக்கள் நடத்தி, கலை நிகழ்ச்சிகள் நடத்தி வெகு சிறப்பான கொண்டாட்டங்கள் 3 நாட்கள் முதல் நான்கு நாட்கள் வரை இருக்கும்.
பொங்கல் பரிசு
எனவே பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் தொகுப்பை வழங்கி வருகிறது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த 2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுப்பை மற்றும் கரும்பு வழங்கப்பட்டன. கடந்த 2023-ம் ஆண்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு கரும்பு உள்பட ரூ.1,000 ரொக்கப்பணம் வழங்கப்பட்டன.
கடந்த ஆண்டு நிலவரம் என்ன
அதேபோல 2024-ம் ஆண்டில் 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட்டது. அதோடு ரூ.1,000 ரொக்கம் வழங்கப்பட்டன. ஆனால் இந்த ரொக்கத்தொகை மத்திய -மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள் ஆகியோருக்கு வழங்கப்படவில்லை.
அதே சமயம் கடந்த 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படவில்லை.
5000 கிடைக்குமா
இதற்கிடையே வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவை வழங்க உள்ளன. அதோடு ரொக்கப்பணமும் வழங்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் பொங்கல் பரிசுடன் ரொக்கமும் வருவது உறுதியாகி உள்ளது. அது ரூபாய் ஆயிரமா?, ரூ.2 ஆயிரமா?, ரூ.3 ஆயிரமா அல்லது ஏன் ரூ.5 ஆயிரமாக கூட இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவித்தால்தான் தெரியும். இருந்தாலும் வரும் பொங்கலுக்கு ரொக்கப்பணம் வழங்குவது மட்டும் உறுதியாகியிருக்கிறது.
மக்கள் எதிர்பார்ப்பு
சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் மாதத்தில் வெளியாகும் என்பதால், ரொக்க பணம் அரசு வழங்கும் என்று மக்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. முன்னதாக கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது அப்போது ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு பொங்கல் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முந்திரி-திராட்சை, ஏலக்காய், ஒரு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.2,500 ரொக்கப்பணம் வழங்கி இருந்தது.
எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
எனவே சட்டசபை தேர்தல் விரைவில் வரவுள்ளதால் கடந்த முறை அ.தி.மு.க. அரசு வழங்கியதை விட கூடுதலாக தி.மு.க. அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பொங்கல் ரொக்க பணமாக ரூ.5 ஆயிரம் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
எவ்வளவு கோடிகள் தேவை
தமிழகத்தில் தற்போதைய நிலையில் 2 கோடியே 27 லட்சத்து 22 ஆயிரத்து 582 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த எண்ணிக்கையில் உள்ள அனைத்து கார்டுகளுக்கும் தலா ரூ.3 ஆயிரம் வழங்கினால் தமிழக அரசுக்கு ரூ.6 ஆயிரத்து 817 கோடி தேவைப்படும். அதுவே ரூ.5 ஆயிரம் என்றால் ரூ.11 ஆயிரத்து 361 கோடி தேவைப்படும்.
வெளியூர் கார்டுதாரர்கள் பொங்கல் ரொக்கம்
அரசு தற்போது அரிசி அட்டைதார்களுக்கு மட்டுமே ரொக்கம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021ம் ஆண்டு தேர்தலின் போதும் இப்படித்தான் அறிவிக்கப்பட்டிருந்தது. அதேநேரம் பொங்கல் பரிசு தொகுப்பை பொறுத்தவரை வெளியூர் கார்டு வைத்துள்ளவர்கள் சொந்த ஊரில் தான் போய் வாங்க முடியும். அதாவது எங்கு ரேஷன் அட்டை உள்ளதோ, அங்கு போய் தான் வாங்க முடியும்
கோட்டையில் ஆலோசனை
இதனிடையே பொங்கல் தொகுப்பு வழங்குவது குறித்து அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டமும் நடந்தது. அதில் பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கு டோக்கன் கொடுப்பது போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்தாண்டு டோக்கன் கொடுக்கும் பணி 7-ந்தேதியும், பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி 11-ந்தேதியும் தொடங்கியது. எனினும் இந்த முறை சற்று முன்னதாகவே தொடங்கும் வாய்ப்பு உள்ளது.
-
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
முதல்வர் வாகனத்தை மறித்த தேர்தல் பறக்கும் படை.. கூலாக அமர்ந்திருந்த ஸ்டாலின்! பைபாஸில் பரபரப்பு -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்' -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது!












Click it and Unblock the Notifications