பொங்கல் பரிசு ரூ.3,000? எப்போது வழங்கப்படும்? அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் பதில்
சிவகங்கை: சிவகங்கையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அது வழங்குவதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன என்றும், பொங்கல் பரிசுத் தொகை 3,000 ரூபாயா அல்லது 5,000 ரூபாயா என்பதை முதல்வர் ஸ்டாலின் தான் அறிவிப்பார் என்றும் நிச்சயம் மக்களை மகிழ்விக்கும் வகையில் ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் கூறினார்.
மதங்களை தாண்டி அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகை தான் பொங்கல் பண்டிகை. தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையாகவும் பொங்கல் பண்டிகை பார்க்கப்படுகிறது. இந்த பொங்கல் தினத்தன்று மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்க தமிழக அரசும் ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது.

பொங்கல் பரிசுத் தொகை
அந்த வகையில் வரும் ஆண்டு பொங்கல் பண்டிகை 15 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதில் ஒரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்கான டோக்கன் திங்கட்கிழமை முதல் வழங்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 22 லட்சம் அரிசி அட்டைதாரர்களுக்கு இந்த பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. வரும் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் இதையொட்டி தமிழக அரசு பொங்கல் பரிசோடு பரிசுத் தொகையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சிலர் ஒரு ரேஷன் அட்டைதாரருக்கு ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை வழங்கப்படலாம் என கூறி வந்தனர்.
சிவகங்கையில் அமைச்சர் பதில்
எதிர்க்கட்சியும் பொங்கல் பரிசாக, ரூ.5,000 வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில், முதலில் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கும் பணியில் தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் ஈடுபட்டுள்ளது. இதனால் பரிசுத் தொகைக்கான அறிவிப்பினை தனியாக முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்த நிலையில் பொங்கல் பரிசுத் தொகை ரூ.3,000 வழங்கப்படுமா அல்லது ரூ.5,000 வழங்கப்படுமா என்பது குறித்தும், எப்போது இந்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்தும் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் விளக்கம் அளித்துள்ளார். சிவகங்கையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:-
மக்களை மகிழ்விக்கும் வகையில்
தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்களை மகிழ்விக்கும் வகையில் அறிவிப்பை வெளியிடுவார். அது 3000 ரூபாயா அல்லது 5,000 ரூபாயா என்பதையும் அவரே அறிவிப்பார். பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் நுகர்பொருள் வணிப கழகத்தில் இருந்து பெறப்பட்டு, கூட்டுறவு கடைகள் மூலமாக அனைத்து கடைகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
கரும்புகளை பொறுத்தவரை மாவட்ட அளவில் கமிட்டி குழு அமைத்து, அந்த குழுவினர் கொள்முதலை செய்துகொண்டு வருகிறார்கள். எல்லாமே சரியாக வந்துவிடும். பரிசுத் தொகையை பொறுத்தவரை முதல்வர் ஸ்டாலின் தான் அறிவிப்பார். மற்றபடி பொங்கல் பரிசுத் தொகுப்பான அரிசி, சர்க்கை உள்ளிட்ட பொருட்கள் அறிவிக்கப்பட்டு வழங்குவதற்கான நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன. பொங்கல் பரிசுத் தொகையை மட்டும் ஸ்டாலின் அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications