பொங்கல் பரிசு தொகுப்பு.. தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்! தமிழகம் முழுவதும் இன்று முதல் விநியோகம்
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பு, இலவச வேட்டி சேலையுடன் இன்று முதல் வழங்கப்படுகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின், பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை, சென்னை சைதாப்பேட்டை, சின்னமலை அருகில் உள்ள ரேஷன் கடையில் இன்று காலை தொடங்கி வைத்துள்ளார். தமிழகம் முழுவதும், டோக்கன் வழங்கப்பட்ட படி பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்பட உள்ளது.
தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு ஆண்டும், ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அதில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் மற்றும் ரொக்கப் பணமும் வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு
அதன்படி, 2025 ஆம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பத்தினரும் பயன்பெறுவார்கள். இதனால் தமிழக அரசுக்கு ரூ.249.76 கோடி செலவு ஏற்படும் எனக் கூறப்பட்டு உள்ளது.
ரொக்கப் பணம் இல்லை
பொங்கல் பரிசுத் தொகுப்பில் பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்து ரூ.1000 ரொக்கப் பணம் இடம்பெறவில்லை. மழை வெள்ள பாதிப்புகளாலும், அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கியதாலும், நிதி நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்கப்படவில்லை என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்குவதற்கான பச்சரிசி, சர்க்கரையை தமிழக நுகர்பொருள் வாணிப கழகமும்; கரும்பை கூட்டுறவு சங்கங்களும் கொள்முதல் செய்தன. அவை, மாநிலம் முழுதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்பட்டு உள்ளன.
ரேஷன் கடைகளில்
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்பட உள்ள இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இவற்றை சேர்த்து வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான டோக்கன்கள் ஜனவரி மூன்றாம் தேதி முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 95 சதவீதம் பேருக்கு டோக்கன்களை விநியோகம் செய்யப்பட்டுள்ளது பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கனில் பரிசுத் தொகுப்பு பெற வேண்டிய நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். டோக்கன் பெற்றுக்கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நாட்களில் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்.

பொங்கல் பரிசு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
இந்த நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை சைதாப்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். சின்னமலை அருகில் உள்ள டி.யு.சி.எஸ் ரேஷன் கடையில் இன்று காலை தொடங்கி வைத்துள்ளார். குடும்பத் தலைவிகள் சிலருக்கு, பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இலவச வேட்டி - சேலை வழங்கும் திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குகின்றனர். பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று முதல் ஜனவரி 13 வரை ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?












Click it and Unblock the Notifications