தலைக்கேறிய காமம்.. அடங்காத சபலம்.. 5 லட்சம் மொத்தமா போச்சு.. பரிதாப சூபர்வைஸர்.. சென்னை ஷாக்!

பாலியல் தொழிலாளிகளிடம் 5 லட்சம் பொங்கல் பரிசை இழந்துவிட்டார் அரசு ஊழியர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூபர்வைஸர் பாஸ்கருக்கு திடீரென காமம் தலைக்கேறிவிட்டது.. சபலம் ஆளையே தூக்கி சாப்பிட்டுவிட்டது.. கடைசியில் லட்சக்கணக்கில் அரசு பணத்தை இழந்து, அசிங்கப்பட்டு, தலைகுனிந்து நிற்கிறார் இந்த அரசு ஊழியர்!

சென்னையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய பொங்கல் பரிசுத் தொகையை பையில் எடுத்துவந்த ரேஷன் கடை மேற்பார்வையாளர் தனது சபலத்தால் பாலியல் தொழிலாளிகளிடம் 5 லட்ச ரூபாயைப் பறிகொடுத்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டை சேர்ந்தவர் பாஸ்கர்... சாஸ்திரிநகரில் உள்ள 2 ரேஷன் கடைகளுக்கும் இவர்தான் சூபர்வைசராக வேலை பார்த்து வருகிறார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதற்காக, 8 லட்சம் ரூபாயை ஒரு பைக்குள் போட்டு முதல் நாள் எடுத்து சென்றுள்ளார்.. பிறகு, பையில் இருந்த பணத்தில் 5 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயை காணோம் என்று தெரியவந்தது.. இதனால் பதறி போன பாஸ்கர், உடனடியாக வடக்கு போலீசில் சென்று பணத்தை யாரோ பிக்பாக்கெட் அடித்து விட்டார்கள் என்றும், கண்டுபிடித்து தருமாறும் புகார் தந்தார். இதையடுத்து, போலீசாரும் என்ன நடந்தது என்ற முதல் விசாரணையை பாஸ்கரிடமே ஆரம்பித்தனர்.

கோயம்பேடு

கோயம்பேடு

அப்போது கோயம்பேடு பஸ் ஸ்டேண்டில் இருந்து ஒரு ஆட்டோவில் வந்ததாகவும், அந்த ஆட்டோவில் ஒரு பெண், தன்னை கடத்தி கொண்டு போய் பாரிஸ் கார்னரில் இறக்கிவிட்டதாகவும் சொன்னார்.. ஆனால், இந்த காரணத்தை போலீசாரால் நம்ப முடியவில்லை.. எனவே, நேரடியாக கோயம்பேட்டுக்கே சென்றனர்.. அங்கிருந்த சிசிடிவி கேமராவையும் ஆராய்ந்தனர்.. அதேபோல, பாரிஸ் கார்னரில் ஆட்டோவில் எங்கு இறங்கினார் என்று கேட்டு, அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவையும் ஆய்வு செய்தனர்.

 2 பெண்கள்

2 பெண்கள்

அப்போதுதான், அங்கிருந்த ஒரு ஏடிஎம்மிற்கு பாஸ்கரன் உள்ளே சென்றுவிட்டு வெளியே வந்தது தெரியவந்தது. இப்போது போலீசார் தங்கள் பாணி விசாரணயை கையில் எடுத்தனர்.. மொத்த விஷயத்தையும் கக்கினார் பாஸ்கர்.. கோயம்பேட்டில் 8 லட்சம் ரூபாயை எடுத்து கொண்டு ஒரு ஆட்டோவில் ஏறினாராம்.. அந்த ஆட்டோவில் 2 பெண்களும் ஏறியுள்ளனர்.. அவர்கள் பாலியல் தொழில் செய்பவர்களாம்.. அவர்கள் பேச்சில் விழுந்த பாஸ்கர், அப்படியே அதே ஆட்டோவில் சபலத்திலும் விழுந்துவிட்டார்.

 பாரிஸ் கார்னர்

பாரிஸ் கார்னர்

பிறகு, அந்த பெண்களுடன் பாரிஸ் கார்னரில் வந்து இறங்கி இருக்கிறார்.. அங்கேயே நைட் நேரத்தில் அவர்களுடன் ஜாலியாக இருந்துள்ளார்.. கடைசியில் அவர்களுக்கு ஏடிஎம் சென்று பணத்தை எடுத்து தந்துள்ளார்.. அதற்கு பிறகு வீட்டுக்கு வந்து பார்த்தபோதுதான், 5.15 லட்சத்தை காணோம் என்று தெரிந்ததாம்.. இதையெல்லாம் கேட்ட போலீசார், அந்த 2 பாலியல் தொழிலாளிகளை தேடி வருகிறார்கள்..

 மக்கள் ஏமாற்றம்

மக்கள் ஏமாற்றம்

இப்போது சிக்கல் என்னவென்றால், மக்களுக்கு பொங்கல்பரிசாக வழங்க வேண்டிய பணம் பறிபோனதால், கோயம்பேடு சாஸ்திரிநகரில் உள்ள அந்த 2 ரேஷன் கடைகளும் மூடப்பட்டுள்ளன.. டோக்கன்களுடன் வந்து ரொம்ப நேரமாக மக்கள் கால் கடுக்க காத்திருந்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.. சபலத்தாலும், காமத்தாலும் பெண்களிடம் சரிந்த இந்த சூபர்வைஸரிடம் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+