பொங்கலுக்கு பணம்.. நேரடியா அக்கவுண்ட்டில் வரப்போகும் ரூ.500.. குஷியில் துள்ளும் ரேஷன் அட்டைதாரர்கள்
சென்னை: புதுச்சேரி ரங்கசாமி, இந்த முறை பொங்கல் பண்டிகைக்கு ஒரு சர்ப்ரைஸ் தந்துள்ளார்.. இது புதுச்சேரி மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
அந்தவகையில், 18 வயது பூர்த்தியடைந்த அனைத்து ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்படும். ஆனால், இந்த நடைமுறையை முதல்வர் ரங்கசாமி தற்போது மாற்றியுள்ளார்..

ரங்கசாமி: வேட்டி, சேலைகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி ரூ.500, வரும் தீபாவளி முதல் ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டு அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்" என்று சமீபத்தில் அறிவித்திருந்தார்.
கடந்த 2021-ல் என்ஆர்.காங்கிரஸ் - பாஜக அரசு பொறுப்பேற்றவுடன் 2022 பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, பச்சைப்பருப்பு, கடலைப்பருப்பு உட்பட 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு பொங்கல் பொருட்களுக்கு பதிலாக பயனாளிகள் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டது.
தீபாவளிக்கு மட்டுமல்லாமல், இந்த வருட பொங்கல் பரிசுத்தொகைக்கும் 500 அறிவித்துள்ளார்.. இந்த வருடம், புதுவை மாநிலத்தில் உள்ள 3 லட்சத்து 53 ஆயிரத்து 249 ரேஷன் கார்டுகளுக்கு, அரிசி, வெல்லம் போன்ற பொங்கல் தொகுப்புக்கு பதிலாக தலா ரூ.500 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. மேலும், இந்த தொகையானது, பொங்கலுக்கு முன்பாக அனைவரது வங்கிக் கணக்கிலும் பணத்தை வரவு வைக்க புதுவை அரசு திட்டமிட்டு வருகிறது.
சர்ப்ரைஸ்: ஏற்கனவே, சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் இலவச துணிக்கு பதிலாக ரூ.1000 வழங்கப்பட்ட நிலையில், இப்போது, பொங்கல் பண்டிகைக்கு 500 ரூபாய் பணமும் வழங்கப்படுவது, அம்மாநில மக்களை மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
எனவே, இதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டு துணைநிலை ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை மூலமாக வழங்கப்படும் பொங்கல் சிறப்பு பொருட்களுக்கு பதிலாக ரூ.500 பணம் வழங்குவது தொடர்பான கோப்புக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் தந்துள்ளார்..
அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள - அரசு ஊழியர்கள் மற்றும் கவுரவ குடும்ப அட்டைதாரர்கள் அல்லாத அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் (10 மளிகை பொருட்கள் அடங்கிய) பொங்கல் சிறப்பு பொருட்களுக்கு ஈடாக தொகை ரூ.500 அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது..
எதிர்பார்ப்பு: இது புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 3,38,761 அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது.. பொங்கலுக்கு முன்னேயே, இந்த தொகையை பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்த அரசு ஆயத்தமாகி வருகிறது. அதுமட்டுமல்ல, விரைவில் தேர்தல் வரும் சூழலில், ரங்கசாமியின் இந்த அதிரடிகளானது, மிகுந்த பலனை ஆளும்கட்சிக்கு ஏற்படுத்தி தரும் என்றும் நம்பப்படுகிறது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications