சென்னையில் மாஸ்.. கோயம்பேட்டில் மஞ்சள் மஞ்சளா இருக்கே.. தமிழக அரசு பொங்கல் அதிரடி.. குஷியில் சென்னை
சென்னை: ரேஷன்தாரர்களுக்கு பரிசுத்தொகுப்பில் வழங்கப்படும் கரும்புகளை, கூட்டுறவு சங்கங்கள் கொள்முதல் செய்ய தொடங்கி உள்ளதுடன், சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் அவைகளை கொண்டுசெல்லும் பணிகள் துரிதமாகி உள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை, ஒவ்வொரு வருடமும் கரும்பு பயிரிடும் விவசாயிகள் அதிக விலைக்கு விற்க முடியுமா? கரும்பு முழுவதும் விற்குமா? என்ற நிலையில் தவிக்கும் நிலைமை ஏற்பட்டு வருகிறது.
தமிழக அரசு: கடந்த சில வருடங்களாகவே, தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பில், கரும்பை சேர்த்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி வருகிறது.. இந்த வருடமும் பொங்கல் பரிசுத்தொகுப்பினை தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.. இதில் முழுக்கரும்பும் இடம்பெற்றுள்ளது.. எனவே, கரும்பு உற்பத்தியும் ஜரூரராக நடந்து கொண்டிருக்கிறது. முக்கியமாக, ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காகவே, சின்னமனூர் பகுதியில் கரும்புகள் மும்முரமாக அறுவடை செய்யப்பட்டு வருகின்றன.

முக்கியமாக, சின்னமனூர், தேவதானப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளிலும் அறுவடை பணிகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. கூட்டுறவு சங்கங்களும் இவற்றை கொள்முதல் செய்ய தொடங்கி உள்ளன. தோட்டங்களில் வெட்டப்படும் கரும்புகள், உடனுக்குடன் லாரிகளில் ஏற்றப்படுகின்றன.. பின்பு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரேஷன் கடைகளுக்கு அவைகள் கொண்டு செல்லப்பட்டும் வருகின்றன.
அந்தவகையில், பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டும் படுபிஸியாகிவிட்டது.. கரும்பு மஞ்சள் கொத்து இஞ்சி கொத்து உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்கி சென்றிட வசதியாக கோயம்பேடு மார்கெட்டில் சிறப்பு சந்தையும் ஸ்பெஷலாக தொடங்கப்பட்டிருக்கிறது..
கோயம்பேடு: வழக்கமாக கோயம்பேடு எப்போதுமே நெரிசல் மிகுந்த பகுதி என்பதால், இந்த முறை, மார்கெட்டுக்கு பின்புறம் உள்ள "ஏ" சாலை மற்றும் மளிகை மார்க்கெட் வளாகம் என 2 இடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.. இங்குதான் சிறப்பு சந்தைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது..
இதனால் தேவையற்ற போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும்.. மேலும், சிறப்பு சந்தையில் குடி தண்ணீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது... மார்கெட் வளாகத்தில் ஆங்காங்கே பொங்கல் சிறப்பு சந்தை நடக்கும் இடங்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய பதாகைகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. இதைத்தவிர ஸ்பீக்கர் மூலம் சிறப்பு சந்தை பற்றி தகவல்களும் உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த ஏற்பாடுகள் எல்லாம் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பேருதவியாக உள்ளது.
சிறப்பு சந்தை: இந்த சிறப்பு சந்தையில், கரும்பு, மஞ்சள் கொத்துக்கள் என லோடு லோடாக வந்து இறங்க தொடங்க விட்டன. நேற்று நள்ளிரவில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு விற்பனைக்கு குவிந்தது..
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் இருந்து 6-க்கும் மேற்பட்ட மினி வேன்கள் மூலம் மஞ்சள் கொத்து வந்து இறங்கியிருக்கிறது. இதனால், சில்லரை வியாபாரிகள் கரும்பு, மஞ்சள் கொத்துகளை தங்களது வாகனங்களில் வாங்கி கொண்டு செல்கிறார்கள்.
விற்பனை ஜரூர்: நாளை நள்ளிரவு முதல் விழுப்புரம், கடலூர், பாண்டிச்சேரி, சேலம் போன்ற பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு விற்பனைக்கு குவிய போகிறதாம்.. அதேபோல, மஞ்சள் கொத்து லாரிகளில் வந்து இறங்க உள்ளதால், அடுத்தடுத்த நாட்களில் கோயம்பேடு உச்சக்கட்ட பிஸியில் காணப்படும்..
இன்று காலை நிலவரப்படி, 15 கரும்புகள் கொண்ட ஒருகட்டு கரும்பு ரூ.500 வரை சிறப்பு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. 10 எண்ணிக்கை கொண்ட மஞ்சள் கொத்து ரூ.120 வரை விற்பனை ஆகிறது. ஆக, பொங்கல் பண்டிகைக்குரிய மொத்த பொருளும், ஒரே இடத்தில் விற்பனைக்கு வந்துள்ளது, பொதுமக்களுக்கு உதவியாகவும், வசதியாகவும் உள்ளது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications