அக்கவுண்ட்டில் ரூ.1000 வந்துருச்சா? பொங்கல் கிப்ட் பணம் யாருமே வாங்கலயா? ரூ.114 கோடி? வெளியான தகவல்
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.20 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா, 1,000 ரூபாய் ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பை வழங்கப்பட்ட நிலையில், பரிசு பணம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், ரேஷன் கடைகளில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.. பண்டிகையொட்டி, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

முன்னதாக, பொங்கல் பரிசு தொகுப்புக்கான ரொக்க தொகையை பெறுவதில் சில கட்டுப்பாடுகளை அரசு விதித்திருந்தது. அதாவது, மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத் துறை நிறுவன பணியாளர்கள், வருமான வரி செலுத்துவோர் போன்ற பிரிவினரைத் தவிர்த்து மற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு, ரூ.1000 பொங்கல் பரிசு கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ரேஷன் பணம்: இதையடுத்து, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்குமே பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டது.
பின்னர் இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, எல்லா அரிசி அட்டைதாரர்களுக்குமே ரூ.1000, அரிசி, சர்க்கரை, முழுக்கரும்பும் பொங்கல் தொகுப்பாக வழங்கப்படும் என்று சர்ப்ரைஸ் தந்தது. இதையடுத்து, ரேஷன் கடைகளும் போகி உட்பட விடுமுறை விடாமல், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசினை வழங்கினார்கள்..
மெசேஜ் சிஸ்டம்: ரூ. 1000 மற்றும் பொங்கல் பரிசு வழங்கியதில் மோசடி ஏதாவது நடந்துள்ளதா என்பதை கண்டுபிடிக்க மெசேஜ் அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டது.. ரூ.1000 பெற்றவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஒருவேளை ஒருவருடைய ரேசன் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டிருந்தால் அது தொடர்பாக புகாரளிக்கவும், ஒரு மொபைல் எண் வழங்கப்பட்டது.
அதுமட்டுமல்ல, பொங்கல் பணம் மீதம் இருந்தால், சரக அலுவலகத்தில் ஒப்படைக்க ரேஷன் பணியாளர்களுக்கு ஆணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மீதமான பொங்கல் பரிசு பணம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது..
யாரும் வாங்காத பணம்: அதில், "ரேஷன் கடைகள் வாயிலாக, 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை வினியோகம் செய்யப்பட்டன. மொத்த கார்டுதாரர்களில், 11.40 லட்சம் பேர் பரிசு தொகுப்பு வாங்கவில்லை. அதனால், கார்டுதாரர்கள் வாங்காமல் மீதமான மொத்த தொகையான, 114 கோடி ரூபாயை, கூட்டுறவு சங்க அதிகாரிகள், அரசு வங்கி கணக்கில் திரும்ப செலுத்தியுள்ளனர்"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து சர்க்கரை அட்டைக்காரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகை அறிவிக்கப்பட்டும்கூட, 114 கோடி ரூபாய் மீதமாகி உள்ளது, கவனத்தை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications