பொங்கலுக்கு ஜாக்பாட்..வீடு தேடி வரும் 3 லட்டு! பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வந்ததா? பறந்த உத்தரவு!
சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கப் பரிசையும் வழங்க அரசு அறிவித்த நிலையில், இந்த பரிசுத்தொகுப்பைப் பெறுவதற்கான டோக்கன் விநியோகம் நேற்று மாநிலம் முழுவதும் தொடங்கியது. டோக்கன்களை நாளைக்குள் கொடுத்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், நாளை மறுநாள் ( ஜனவரி 8) பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகை, தொகுப்பு, வேட்டி சேலை ஆகியவை வழங்கப்படவுள்ளது.
பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் நலத் திட்ட உதவிகளுடன் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தின் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 730 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கும், இந்த ஆண்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

இதற்காக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படுவதுடன், இதற்கு ரூ.248 கோடியே 66 லட்சத்து 17 ஆயிரத்து 959 நிதி ஒதுக்கி தமிழக அரசு கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அரசாணை வெளியிட்டது.
பொங்கல் ரொக்கப் பரிசு
இதனுடன் கூடுதலாக, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கப் பரிசாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார். இதனால், பொங்கல் பரிசுத்தொகுப்பும், ரொக்கப் பரிசும் சேர்த்து மொத்தம் ரூ.6,936 கோடியே 17 லட்சத்து 47 ஆயிரத்து 959 செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வழக்கம்போல் இந்த பரிசுத்தொகுப்பு நியாயவிலைக் கடைகள் மூலம் டோக்கன் அடிப்படையில் வழங்கப்படும்.
பொங்கல் பரிசு டோக்கன்
அந்த வகையில், டோக்கன் விநியோகம் நேற்று தொடங்கியது. நியாயவிலைக் கடை பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று குடும்ப அட்டைதாரர்களிடம் டோக்கன்களை வழங்கினார்கள். மேலும், கடைகளுக்கு வருவோருக்கும் டோக்கன்கள் வழங்கப்பட்டன. இந்த விநியோகம் நாளைக்குள் முழுமையாக நிறைவு செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், வரும் ஜனவரி 8ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கப் பரிசு வழங்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நியாயவிலைக் கடைகள்
அந்த நாளிலிருந்து பொதுமக்கள் தங்களது நியாயவிலைக் கடைகள் மூலம் பரிசுத் தொகுப்பைப் பெற முடியும்.
பொங்கல் பண்டிகையின் மகிழ்ச்சியை மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த பரிசுத்திட்டம் முன்னெடுக்கப்படுவதால், தமிழகத்தின் கீழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே சொன்னது போல ஒவ்வொரு டோக்கனுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, 3000 ரூபாய் ரொக்கத்துடன், தமிழக அரசின் வேட்டி சேலையும் வழங்கப்பட உள்ளது.
தமிழக அரசு உத்தரவு
ஏற்கனவே சர்க்கரை, அரிசி உள்ளிட்டவை ரேசன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு விட்ட நிலையில், நாளைக்குள் கரும்பும் கொள்முதல் செய்யப்பட்டு ரேசன் கடைகளுக்கு சென்று சேரும். இந்த நிலையில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 200 முதல் 300 என பொதுமக்களுக்கு பரிசுத் தொகுப்பினை வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் அதிகளவில் கூட்டம் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications