பொங்கல் விடுமுறை நாட்களில் சென்னை மெட்ரோ சேவை இருக்குமா! வந்த புது அறிவிப்பு! அப்போ மின்சார ரயில்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் காரணமாகப் பொதுமக்கள் வீடுகளுக்குச் செல்ல ஆரம்பித்துள்ள நிலையில், பொங்கல் நாட்களில் மெட்ரோ சேவை இருக்குமா என்பது குறித்து முக்கிய அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது.

தமிழர் திருநாளாம் பொங்கல் விழா அடுத்த வாரம் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு பொங்கல் விடுமுறை திங்கள்கிழமை வருகிறது. அதற்கு முன்பு இரு நாட்கள் வார இறுதி விடுமுறை என்பதால், பொதுமக்கள் இன்று வெள்ளிக்கிழமை முதலே சொந்த ஊருக்குப் படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

Pongal Holidays Chennai metro will operate on sunday schedule on Pongal holidays

இதற்காகத் தலைநகர் சென்னை உட்பட மாநிலத்தின் பல்வேறு முக்கிய ஊர்களிலும் சிறப்புப் பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று பலரும் ஒரே நேரத்தில் சென்னையை விட்டு வெளியேறுவார்கள் என்பதால் புறநகர்ப் பகுதிகளில் டிராபிக் நெரிசல் ஏற்படும்.

பொங்கல்: இப்படி பெரும்பாலான சென்னை மக்கள் பொங்கல் பண்டிகைக்காகச் சென்னையை விட்டு வெளியேறும் நிலையில், விடுமுறை முடியும் வரை நகரில் பெரிதாக எங்கும் டிராபிக் இருக்காது. அடுத்த வாரம் புதன்கிழமை அதாது 17ஆம் தேதி வரை பொங்கல் விடுமுறை இருக்கும் நிலையில், அதுவரை பெரியளவில் கூட்டம் எங்கேயும் இருக்காது. இதனால் இந்த நாட்களில் மெட்ரோ இயங்குமா என்பதே இங்கே பலருக்கும் கேள்வியாக இருந்தது.

இதற்கிடையே பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ சேவை குறித்த முக்கிய அறிவிப்பை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது குறித்து மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "2024 ஆம் ஆண்டு ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் ஞாயிற்றுக்கிழமையின் அட்டவணையின் படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்..

"நெகிழ்ச்சி.." ஃபோனுக்கு வந்த இரங்கல் செய்தி.. கண்ணீர் மறைத்து வேலையை கவனித்த ரேஷன் கடை ஊழியர்

மெட்ரோ: பொங்கல் விடுமுறையை முன்னிட்டு 2024 ஆம் ஆண்டு ஜனவரி 15 (திங்கட்கிழமை), 16 (செவ்வாய்க்கிழமை) மற்றும் 17 (புதன்கிழமை) ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமையின் அட்டவணையின் படி மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். அதன்படி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். மெட்ரோ இரயில் பயணிகள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. பொங்கல் விடுமுறை நாட்கள் முடிந்த பிறகு, வரும் 18ஆம் தேதி முதல் வழக்கம் போல மெட்ரோ ரயில் சேவை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புறநகர் ரயில்கள்: அதேபோல சென்னை புறநகர் ரயில் சேவை குறித்தும் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை அன்று சென்னை புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என்றும் சென்னை - அரக்கோணம், சூளூர்பேட்டை, கடற்கரை - செங்கல்பட்டு, வேளச்சேரி மார்க்கங்களில் ஞாயிறு அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+