பொங்கல் பரிசு ரூ.3000 கன்பார்ம்.. அதிகாரிகள் கிரீன் சிக்னல்.. ஸ்டாலின் சிக்ஸர்.. யாருக்கு வரும்?
சென்னை: தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசாக ரூ.3000 வழங்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இதற்கான கிரீன் சிக்னலை நிதித்துறை அதிகாரிகள் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. முதலில் ரூ.5000 வழங்க திட்டமிடப்பட்டது.
ஆனால் ரூ. 5000 வழங்கினால் கடுமையான நிதி இழப்பு ஏற்படும். இந்த இழப்பை தவிர்க்க ரூ.3000 கொடுத்தால் போதுமா என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். நிதி ரீதியிலான ஆய்வுகளை செய்த அதிகாரிகள் ரூ. 3000 கொடுத்தால் பெரிய இழப்பு இருக்காது என்று முதல்வரிடம் கூறி உள்ளனர். இதையடுத்து ரூ. 3000 பொங்கலுக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

தமிழக அரசின் டாப் தலைகள் சிலர் நிதித்துறை தரப்பிடம் இது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த வருடம் தமிழக சட்டசபை தேர்தல் வரும் நிலையில் இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
பொங்கல் பரிசு
தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு ஒரு பண்டிகை பொங்கல் திருநாளாகும். மனித குலத்திற்கே அடித்தளமாய் விளங்கி, உணவளித்து வரும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாகவும் தமிழர்களாகிய அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட பொங்கல் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடிட ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள் வருமான வரி செலுத்துவோர் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர். சர்க்கரை அட்டைதாரர்கள். பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 5,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும், மாநிலத்தின் நிதி நிலை காரணமாக அதிகாரிகள் சவால்களை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. தமிழகத்தின் நிதி பற்றாக்குறை ஒரு பெரிய கவலையாக உள்ளது. மேலும், அரசு ஏற்கனவே பல நலத்திட்டங்கள், மானியங்கள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு கணிசமான நிதியை ஒதுக்கியுள்ளது. அதோடு மகளிர் உரிமைத்தொகையும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. நிதி நெருக்கடி காரணமாக 5 ஆயிரத்திற்கு பதிலாக 3 ஆயிரம் ரூபாய் வழங்க அதிகாரிகள் ஆலோசனை வழங்கியதால் , ஸ்டாலின் அதை ஏற்றுக்கொண்டு 3 ஆயிரம் ரூபாய் வழக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
மகளிர் உரிமை தொகை
ஏற்கனவே மகளிர் உரிமை தொகைத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. மகளிர் உரிமை தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. வரும் டிசம்பர் 13ம் தேதியில் இருந்து மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
ஸ்டாலின் எடுக்கும் சர்வே
இந்த நிலையில்தான் தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு முன்பாக மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் முக்கியமான சர்வே ஒன்றை நிர்வாகிகள் மூலம் எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி அரசு ஊழியர்களைக் கொண்ட சிறப்புக்குழு ஒன்று, வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ஒவ்வொரு குடும்பத்தினருடனும் பேச உள்ளது. பல முக்கியமான கேள்விகளை கேட்க உள்ளனர். பொங்கல் பரிசு வந்ததா, மகளிர் உரிமைத் தொகை மற்றும் பள்ளி உதவி தங்கள் வீட்டைச் சென்றடைந்ததா என விசாரித்து, ஒரு படிவத்தை வழங்கி விவரங்களை பெறுவார்கள்.
படிவத்தைச் சமர்ப்பிப்பவர்களுக்கு QR குறியீடு வழங்கப்படும். அதில் கோரிக்கையின் நிலையை அறிய முடியும். அவர்களுக்கு இருக்கும் கோரிக்கைகளை கேட்டு, அதன் அடிப்படியில் உடனடி தீர்வு அல்லது தேர்தல் வாக்குறுதிகளாக திமுகவினர் இதை வழங்குவார்கள் என்று ஆளும் திமுக தரப்பு கூறி உள்ளது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications