பொன்மகன் சேமிப்பு திட்டம்.. தமிழ்நாட்டில் மட்டுமே இருக்கும் திட்டம்.. ஆண்குழந்தைகளுக்கான வரப்பிரசாதம்
சென்னை: தங்கள் மகனின் எதிர்காலத்திற்காக சேமிக்க விரும்பும் பெற்றோருக்கு மிகச்சிறந்த வரப்பிரசாதம்தான், பொன்மகன் பொதுவாய்ப்பு நிதி திட்டம்.. இதன் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
பொதுமக்களின் வசதிக்காக மத்திய அரசு பல்வேறு வசதிகளை செய்து தருகிறது.. அதில் ஒன்றுதான் சிறு சேமிப்பு திட்டங்களாகும்.
சிறுசேமிப்புகள்: இந்த சிறுசேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பானது.. ஓரளவு அதிக வட்டி அளிக்ககூடியதுமாகும்.. தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் உள்ளன.. அதேபோல சில வங்கிகளும் நிரந்தர வைப்புக் கணக்குகளுக்கு கணிசமான வட்டியை அளிக்கின்றன.

அரசு அங்கீகாரம் உள்ளதால் சேமிப்பும் பாதுகாப்பானவை.. அதுமட்டுமல்ல, இதில் வட்டி குறைந்துவிடுமோ? அல்லது முதலீடு முழுவதுமாக போய்விடுமோ? என்றெல்லாம் பயம் தேவையில்லை.. காரணம், சில சேமிப்புத் திட்டங்களுக்கு அளிக்கப்படும் வட்டித் தொகை வழக்கமான வட்டியை விட அதிகமாகவே இருக்கின்றன.. சிலவற்றுக்கு வரிச்சலுகையும் இருக்கின்றன.. வட்டியும் உரிய நேரத்தில் கிடைத்துவிடுகின்றன. இந்த சிறு சேமிப்பு திட்டங்களில், எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
ஆர்வம்: அதனால்தான், மற்ற திட்டங்களை காட்டிலும், சிறு சேமிப்பு திட்டங்கள் அதிக வட்டி விகிதங்கள் மற்றும் கடன் வசதியை வழங்குவதால் பெரும்பாலான மக்கள் இந்த திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்...
அதேசமயம், தமிழகத்தில் உள்ள சிறுசேமிப்பு திட்டங்களும் மக்களை கவர்ந்து வருகின்றன.. இதில், மிக முக்கியமானது பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டமாகும்.. தமிழகத்திலேயே ஆண்களுக்கு மட்டும் இருக்கும் சிறுசேமிப்பு திட்டமாகும்.. இது கடந்த செப்டம்பர் 2015-ல் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டமாகும்.
எப்படி பெண் குழந்தைகளுக்காக, பொன்மகள் சிறுசேமிப்பு திட்டம் உள்ளதோ, அதுபோலவே, ஆண் குழந்தைக்காக மட்டுமே செயல்படுத்தப்பட்ட திட்டம்தான் இது. ஆண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேமிக்க விரும்பும் மிகச்சிறந்த திட்டமாகும்..
இந்த சிறுசேமிப்பு கணக்கை எப்படி துவங்குவது தெரியுமா? தமிழகத்தில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் அதாவது, தமிழகத்தில் உள்ள தலைமை-துணை அஞ்சலகங்களில் மட்டுமே கணக்கை தொடங்க முடியும். தமிழகத்தில் மட்டும் 2 ஆயிரம் தலைமை-துணை அஞ்சலகங்கள் உள்ளன. சென்னை மண்டலத்தில் 600-க்கும் மேற்பட்ட தலைமை-துணை அஞ்சலகங்கள் இருக்கின்றன.
இந்த திட்டத்திற்கான விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும்.. குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் பெற்றோர்/பாதுகாவலரின் அடையாளச் சான்று போன்ற தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பித்து விடவும். ஆரம்ப வைப்புத்தொகை ரூ.500 இருக்க வேண்டும்.. கணக்கு திறக்கப்பட்டதுமே, குழந்தைக்கு பாஸ்புக் தந்துவிடுவார்கள்.
யாரெல்லாம் இந்த கணக்கை துவங்கலாம் தெரியுமா? 10 வயதுக்குட்பட்ட மைனர் சிறுவனின் சார்பாக பெற்றோர் அல்லது பாதுகாவலர் (guardian) கணக்கைத் திறக்கலாம்... அதாவது, இதில், முதலீடு செய்ய விரும்புபவர்களின் பிள்ளைக்கு 10 வயதுக்குக் குறைவாக இருக்கின்றது என்றால் பாதுகாவலர் உதவியோடு கணக்கை துவங்கலாம்.. இதுவே 10 வயதை பூர்த்திச் செய்திருந்தால் ஆண் குழந்தை தானாகவே பொன் மகன் சேமிப்புத் திட்டத்தில் கணக்கை துவங்கலாம்.
வயது வரம்பு: பொன் மகன் பொது வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 8.5 சதவீதம் வட்டி விகிதம் அளிக்கப்படுகின்றது.
பொன் மகன் பொது வைப்பு நிதி திட்டத்தில்குறைந்தபட்ச ஆரம்ப வைப்புத்தொகை ரூ. 500 மற்றும் அதிகபட்ச வருடாந்திர வைப்புத்தொகை ரூ. 1.5 லட்சம்.. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 வருடங்களாகும்.. எனினும், அடுத்த 5 வருடங்களை தொகுப்புகளாக அதிகரித்து கொள்ளலாம். ஆண் குழந்தை வளர்ந்து மேஜர் ஆனதுமே, சம்பாதித்த வட்டி உட்பட முழுத்தொகையும் குழந்தைக்கு வழங்கப்படும்.
சூப்பர் வசதி: அதே நேரம் குறைந்தபட்ச வயது வரம்பு என்றும் ஏதும் இதில் கிடையாது. கணக்கைத் துவங்க குறைந்த பட்சம் 100 ரூபாய் கணக்கில் வைப்பு வைக்க வேண்டும். பின்னர் ஆண்டுக்குக் குறைந்தது 500 ரூபாய் முதல் 1.50 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.












Click it and Unblock the Notifications