"வாய்" விட்ட இளங்கோ.. ஒரு நீதிபதின்னு கூட பார்க்கலயே.. ஸ்டாலின் வரைக்கும் போயாச்சு மேட்டர்.. டென்ஷன்
சென்னை: பொன்முடி விவகாரத்தில் மூத்த வழக்கறிஞரும் திமுக எம்பியுமான என்.ஆர்.இளங்கோ தந்த பேட்டி திமுகவுக்குள் பரபரப்பையும், சர்ச்சையையும் கிளப்பி விட்டுள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் 3 வருட சிறை தண்டனையும் 50 லட்ச ரூபாய் அபராதமும் விதித்திருக்கிறது சென்னை ஹைகோர்ட்.

தானும் தன்னுடைய மனைவியும் நிரபராதி என்று நீதிபதியை பார்த்து பொன்முடி கைக்கூப்பி சொன்னபோதும்கூட, தங்களது மருத்துவ ஆவணங்களை சமர்பித்து தண்டனையை குறைக்க வேண்டும் என்று கேட்டபோதும்கூட, அதனை நீதிபதி ஜெயசந்திரன் ஏற்கவில்லை.. 2 பேருக்குமே 3 வருட சிறை தண்டனையை விதித்தார்.
தண்டனை: தற்சமயம் தண்டனையை நிறுத்தி வைத்தாலும், இந்த தீர்ப்பு திமுகவினரிடம் பெருத்த அதிர்ச்சியை உண்டுபண்ணி வருகிறது.. சுப்ரீம்கோர்ட்டுக்கே போயி பொன்முடிக்கு விடுதலையை பெற்றுத் தருவோம் என்று திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவன் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக சீனியர் கவுன்சில் என்.ஆர்.இளங்கோ நேற்று பேட்டி ஒன்றையும் தந்திருந்தார்.. அந்த பேட்டியில், "பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி ஒருதலைபட்சமாக செயல்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாக மூத்த வழக்கறிஞரும் திமுக எம்பியுமான என்.ஆர்.இளங்கோ தெரிவித்தார்.
பொன்முடி: அதுமட்டுமல்ல, பொன்முடி மீது அதிமுக ஆட்சியில் பழிவாங்கும் நோக்கத்தோடு வழக்கு போடப்பட்டது என்றும் சுப்ரீம்கோரட்டில் மேல்முறையீட்டில் பொன்முடி விடுவிக்கப்படுவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும், பொன்முடியின் மனைவி ஒழுங்காக வருமானவரி செலுத்தவில்லை என்ற ஒரே காரணத்தால் ரூ.1.75 கோடி லாபத்தை கணக்கில் கொண்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறியிருந்தார்.
பொன்முடிக்கு தண்டனை வழங்கிய நீதிபதி ஜெயச்சந்திரனை, அதிமுக அனுதாபி என்கிற வட்டத்துக்குள் அடைக்க முயற்சிக்கும் வகையில், இளங்கோ பேட்டி தந்ததுடன், அதிமுக ஆட்சியில் சட்டத்துறை செயலாளராகவும், பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு கணக்குகளை ஆராய்ந்தவர் என்றும் குற்றச்சாட்டாகவும் முன்வைத்திருந்தார் இளங்கோ.
தீர்ப்பு: இந்த பேச்சு கடந்த 2 நாட்களாகவே நீதித்துறையில் சர்ச்சையை ஏற்படுத்தியும் விவாதப்பொருளாகவும் மாறியிருக்கிறது... காரணம், தீர்ப்பை விமர்சிக்கலாம், ஆனால் தீர்ப்பு கொடுத்த நீதிபதியின் செயலுக்கு உள் நோக்கம் கற்பிக்கும் வகையில் விமர்சிக்கக் கூடாது. அப்படி விமர்சித்தால் அவமதிப்பு வழக்கு பாயும் என்கிறார்கள்.
அதைவிட முக்கியமாக, சீனியர் கவுன்சிலாக இருப்பவர்கள் பொதுவெளியில் பேட்டி அளிக்கக் கூடாது. அதனை என்.ஆர்.இளங்கோ மீறிவிட்டார் என்ற விமர்சனமும் திமுக கிரிமினல் வழக்கறிஞர்களிடமே விவாதிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, அதெப்படி 30 நாட்களுக்குள் சுப்ரீம்கோர்ட்டில் சாதகமான உத்தரவை பெற முடியும் என்றும் சிலர் சந்தேகங்களை கிளப்பி வருகிறார்கள்.
சலசலப்பு: இந்த நிலையில், என்.ஆர். இளங்கோ பேட்டி தந்திருக்கக்கூடாது என்பதுடன், ஜெயச்சந்திரனை இளங்கோ விமர்சித்திருக்கவும் கூடாது என்றும் சலசலக்கப்பட்டு வருகிறது.. இந்த விஷயம், முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாம். ஏற்கனவே, முதல்வருக்கு பல நெருக்கடிகள் ஆளும் தரப்பினராலேயே முன்னெழுந்து வரும்போது, இந்த விவகாரமும் சேர்ந்து கொண்டுள்ளது, திமுகவுக்குள்ளேயே அனலை கிளப்பி வருகிறதாம்.












Click it and Unblock the Notifications