Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொன்முடி பதவி காலியானால் அடுத்த அமைச்சர் யார்? லிஸ்டில் இடம்பெற்ற பெயர் யாருடையது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் பொன்முடி வழக்கில் நாளை என்ன நடக்க போகுமோ என்ற எதிர்பார்ப்பு எகிறி வரும்நிலையில், அதுகுறித்த தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.

கடந்த 2006 - 11ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, உயர்கல்வி மற்றும் கனிமவள அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார்... இதற்கு பிறகு, அதிமுக ஆட்சி வந்ததும், பொன்முடிக்கு எதிராக, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்புத் துறை, 2011 செப்டம்பரில் வழக்கு தொடர்ந்தது.

Ponmudi resigns as Minister and what did Tamil Nadu CM MK Stalin say to Ponmudi about his Case issue

இந்த வழக்கில் இருந்து பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்து, 2016 ஏப்ரலில், விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதனை எதிர்த்து 2017ல் லஞ்ச ஒழிப்புத்துறை அப்பீல் செய்தது.. இதனை விசாரித்த சென்னை ஹைகோர்ட், 2 பேரின் விடுதலையை ரத்து செய்து, 2 பேருமே குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது...

குற்றவாளி: மேலும், இதுதொடர்பான தண்டனை விபரங்களை நாளை அதாவது 21ம்தேதி அறிவிக்க உள்ளதாக கூறயிருக்கிறது.. சொத்து குவிப்பு வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி இருப்பதால் பொன்முடி, அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழக்க உள்ளதாக தெரிகிறது..

அதேநேரத்தில் சுப்ரீம்கோர்ட்டை அணுகி இந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை வாங்கி, தன்னுடைய பதவியை காப்பாற்றவும் அவர் தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இப்படி 2 விதமான தகவல்களுக்கிடையே, வேறு சில தகவல்கள் நமக்கு பிரத்யேமாக கிடைத்துள்ளன..

சட்டப்பிரிவுகள்: ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், பொன்முடி குற்றவாளி என்று என்று தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதால், இந்த தீர்ப்பு வந்த நிமிடத்திலேயே எம்எல்ஏ பதவியை இழந்து விட்டதாக சட்டப்பிரிவுகள் சொல்கின்றன... குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதை அறிந்தபோது, விழுப்புரத்தில், ஒரு அரசு நிகழ்ச்சியில் இருந்தாராம் பொன்முடி.

பிறகு, அவசரம் அவசரமாக நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீடு திரும்பிய பொன்முடி, தன்னுடைய வக்கீல்களை தொடர்புகொண்டு விசாரித்து விவரங்களை முழுமையாக அறிந்து கொண்டார்.. பிறகு, டெல்லியில் இருந்த முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொண்டும் பொன்முடி பேசியிருக்கிறார்...

ராஜினாமா: இது குறித்து பொன்முடியின் தரப்பில் நாம் விசாரித்தபோது, "முதல்வரிடம், அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்துவிடுகிறேன். அந்த கடிதத்தை தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்" என்று சொன்னார் பொன்முடி.

அதற்கு ஸ்டாலின், "நான் சென்னை வந்ததும் ஆலோசிப்போம். தண்டனை இன்னும் அறிவிக்கவில்லையே.. ஒருவேளை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு கால அவகாசம் தந்தால், அதுவரை தண்டனையை நிறுத்தி வைக்கலாம் தானே? அதனால், ராஜினாமாவை இப்போது செய்யாதீர்கள். சென்னை வந்ததும் முடிவு செய்யலாம் " என்று அறிவுறுத்தினாராம்.. அதற்கு பிறகே, அமைதியானார் பொன்முடி" என்கிறார்கள் நம்மிடம்.

நாளை தண்டனை: சென்னை உயர்நீதிமன்ற கிரிமினல் லாயர்களிடம் இதுகுறித்து நாம் விசாரித்தபோது, "எப்படி ஆலோசித்தாலும் பொன்முடி அமைச்சராக நீடிக்க முடியாது... நாளைக்கு தண்டனை அறிவிக்கப்படவிருப்பதால் அப்போது அவர் கோர்ட்டில் நேரிலோ அல்லது காணொலி காட்சி வழியாகவோ ஆஜராக வேண்டும். அப்போது அவர் அமைச்சராக இருந்தால் சட்ட சர்ச்சை உருவாகும். அதை முதல்வர் விரும்பமாட்டார்.

அதனால், தண்டனையை அறிவிக்கப்படும் போது அவர் எம்எல்ஏவாகவோ அமைச்சராகவோ இருக்கமாட்டார். அதற்கு முன்பாக ராஜினாமா செய்து விடுவார் பொன்முடி" என்று நம்மிடம் வழக்கறிஞர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். ஆக, சென்னை திரும்பும் ஸ்டாலின், பொன்முடி விவகாரம் குறித்து ஆலோசித்த பிறகு, ராஜினாமா அரங்கேறும் என தெரிகிறது.

நியமனம்: இதற்கிடையே, பொன்முடி ராஜினாமா செய்வதை அடுத்து அமைச்சரவையை மாற்றியமைக்கும் கட்டாயத்தில் இருக்கிறார் ஸ்டாலின். அதாவது, பொன்முடியிடம் இருந்த உயர்கல்வி துறைக்கு புதிய அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படுவாரா? அல்லது இருக்கும் அமைச்சர் ஒருவரிடம் கூடுதல் பொறுப்பாக உயர்கல்வித்துறை ஒப்படைக்கப்படுமா? அல்லது அமைச்சரவை இலாகாக்களே மாற்றியமைக்கப்படுமா? என்கிற விவாதம் கோட்டையில் எதிரொலிக்கிறது.

இதை சாக்காக வைத்து, உதயநிதிக்கு நெருக்கமான முதல்முறை எம்எல்ஏக்கள் சிலர் உயர்கல்விவை கைப்பற்ற முயற்சிக்கின்றனர். குறிப்பாக, ஆயிரம் விளக்கு எம்எல்ஏ டாக்டர் எழிலன் ரகசிய முயற்சியில் இருக்கிறார் என்கிறது அறிவாலய வட்டாரம்.. எதுவானாலும் அடுத்த சில நாளில் தெரிந்துவிடும்.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+