தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் கல்லூரி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை.. பொன்முடி
சென்னை: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் கல்லூரி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டன.

எனினும் விருப்பம் இருப்போர் நேரில் போகலாம். இல்லாதவர்கள் வழக்கம்போல் ஆன்லைன் வகுப்பில் இருக்கலாம் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் இரண்டாவது அலை தீவிரமடைந்த நிலையில் மீண்டும் கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது. தற்போதைய ஊரடங்கில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவரங்கள் குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று ஆலோசனை மேற்கொண்டார். 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடும் முறை தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நேரடியாக வகுப்புகளை நடத்துவது குறித்தும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தை முடித்து விட்டு அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அதில் தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கல்லூரி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும். அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். அனைத்து பல்கலைக்கழகங்களும் எம் பில் படிப்பு இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம் என பொன்முடி தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications