சுதீஷையே அனுமதித்தோம்.. விஜயகாந்த்தை விடாமல் இருப்போமா.. அண்ட புளுகு புளுக கூடாது.. பொன்முடி பொளேர்
பிரேமலதாவை முன்னாள் அமைச்சர் பொன்முடி சரமாரியாக விமர்சனம் செய்துள்ளார்.
Recommended Video

சென்னை: "கருணாநிதியை பார்க்க சுதீஷையே அனுமதித்தபோது, விஜயகாந்த்தை பார்க்க அனுமதிக்காமல் இருப்போமா? இப்படி அண்டப்புளுகு புளுகினால் என்ன அர்த்தம்?" என்று கேள்வி எழுப்பு உள்ளார் முன்னாள் அமைச்சர் பொன்முடி.
கடந்த 3 தினங்களாகவே தேமுதிக கூட்டணி விவகாரம் பெரிய விவகாரமாக உருவெடுத்து விட்டது. இதில் ஒவ்வொரு கட்சிகளும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகிறார்கள்.
குறிப்பாக திமுக மற்றும் அதன் பொருளாளர் துரைமுருகன் மீதான குற்றச்சாட்டும், நேற்று செய்தியாளர்களிடம் பிரேமலதா நடந்து கொண்ட விதமும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. இது சம்பந்தமாக அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் தரப்பு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பேச்சுவார்த்தை
அந்த வகையில் தனியார் தொலைக்காட்சிக்கு முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் சொன்னதாவது: "ஒரே நேரத்தில் 2 கட்சிகளுடன் கூட்டணி பேசியது தேமுதிகதான். அவர்களின் வாக்கு வங்கி என்ன என்பது அவங்களுக்கே தெரியும்.

சுதீஷ்
விஜயகாந்தை கருணாநிதியை பார்க்க அனுமதிக்கவில்லை என்று சொல்கிறார்கள். சுதீஷை அனுமதிக்கும்போது விஜயகாந்தை நாங்கள் அனுமதிக்காமல் இருப்போமா? இப்படி அண்டப்புளுகு புளுகினால் என்ன அர்த்தம்.

உண்மை தெரியும்
அதனால் கருணாநிதியை சந்திக்க விஜயகாந்தை அனுமதிக்கவில்லை என்று சொல்வது கொஞ்சமும் சரி கிடையாது. அன்று ஸ்டாலினுடன் இருந்தவர்கள் நாங்கள்தான். அன்று என்ன நடந்தது என்று எங்களுக்கு நன்றாக தெரியும்.

கத்துக்குட்டி
நேற்று செய்தியாளர் சந்திப்பில் பிரேமலதா அரசியலில் கத்துக்குட்டியாகவே இருப்பதுதான் வெளிபட்டுள்ளது. அவர் நடந்து கொண்ட விதமாக இருந்தாலும் சரி, செய்தியாளர்களிடம் கோபப்பட்டு நடந்துக்கொண்ட விதமாக இருந்தாலும் சரி, கூட்டணி கண்டிப்பாக வைப்போம் என்று சொல்லி கொண்டிருக்கிற அதிமுகவையும் சரி, பாஜகவையும் சரி, அவர் விமர்சனம் செய்த விதமானாலும்சரி, இவை எல்லாமே பிரேமலதா அரசியலில் அரிச்சுவடி கூட தெரியாதவர் என்பதுதான் நிரூபணம் ஆகிஉள்ளது.


Click it and Unblock the Notifications
