என்னண்ணே.. இப்படிக் கூச்சப்பட்டா எப்படி.. பேசிப் பழகத் தயங்கும் பொன்முடி மகன்!
சென்னை: கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி கட்சியினரிடம் பேசக் கூட தயங்குகிறாராம். அந்த அளவுக்கு கூச்ச சுபாவம் மிக்கவராக அவர் காணப்படுகிறார்.
கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டுள்ள கவுதம சிகாமணி, முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் ஆவார். இவர் ஆர்த்தோ மருத்துவர். முதல் முறையாக தேர்தல் களம் கண்டுள்ளார்.
இவர், கூச்ச சுபாவம் மிக்கவராக உள்ளதால் இவரை வைத்து பிரச்சாரம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடுவதாக கூறுகிறார்கள் லோக்கல் உ.பி.க்கள். அந்த அளவுக்கு பேசக் கூட தயங்குகிறாராம் பொன்முடி மகன்.

அப்பா மாதிரி இருக்க வேண்டாமா
தந்தை 8 அடி பாய்ந்தால் மகன் 16 அடி பாய வேண்டாமா எனக் கேள்வி எழுப்பும் அவர்கள், கட்சியினர் மத்தியில் கவுதம சிகாமணி வாய் திறந்து கூட பேசமாட்டேங்கிறார் என்கின்றனர்.

அப்பா போல்டு.. மகனோ கோல்டு!
பொன்முடியை பொறுத்தவரை மிக போல்டாக பேசக்கூடியவர், வாதம் என்றால் அவரை வெல்வது எதிர்தரப்புக்கு கடினம். இந்நிலையில், உதயசூரியன் எம்.எல்.ஏ., மாவட்டச்செயலாலார் அங்கையற்கன்னி போன்றோரிடம் தேர்தல் பணி தொடர்பாக வேட்பாளர் என்ற முறையில் இதுவரை கவுதம சிகாமணி எதுவும் பேசியதில்லையாம்.

எல்லாம் அப்பா பாத்துக்குவார்
எல்லாம் அப்பா பார்த்துக்குவார் என்றே சொல்லுகிறாராம். எம்.பி.ஆக போறவர் இப்படியா இருக்கிறது, போல்டாக பேசி அனைவரிடமும் பழக வேண்டாமா என கேட்கிறார் கள்ளக்குறிச்சியில் திமுக கூட்டணிக்கு தேர்தல் பணியாற்றும் முக்கிய நிர்வாகி ஒருவர்.

போகப் போக பார்ப்போம்
அரசியலுக்கு வருவதற்கு முன்பும், வந்த புதிதிலும் பலர் கூச்ச சுபாவம் உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள்.. ஆனால் போகப் போக பிக்கப் ஆகி, இவரா அவர் என்று அனைவரும் ஆச்சரியப்படும் அளவுக்கு மாறிப் போய் விடுவார்கள். அந்த வரிசையில் கவுதமும் சேருவாரா என்பது போகப் போகத்தான் தெரியும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications