அடங்கப்பா.. இது லிஸ்ட்லயே இல்ல! ராஜாஜி, ஜெயலலிதாவை விட எடப்பாடிதான் டாப்! பூரித்து புகழும் பொன்னையன்
சென்னை: அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மூதறிஞர் ராஜாஜி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விட நினைவாற்றல் மிக்கவராக திகழ்கிறார் என அக்கட்சியின் மூத்த நிர்வாகி பொன்னையன் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன், அக்கட்சி நிர்வாகி நாஞ்சில் கோலப்பன் என்பவருடன் பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று அண்மையில் இணையத்தில் வெளியாகி பெரும் அக்கட்சியினரிடையே அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற எடப்பாடி பழனிச்சாமி பணம் கொடுத்ததாக பொன்னையன் பேசியாதாக இந்த ஆடியோவில் பதிவாகியருந்தது.

பொன்னையன் சர்ச்சை
மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லை என்றும், எடப்பாடி கட்டுப்பாட்டில் கட்சி இல்லை என்றும் கூறப்பட்டது. வேலுமணி, தங்கமணி போன்றார்தான் கட்சியை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார்கள் என்றும் பொன்னையன் கூறுவதாக ஆடியோ பதிவாகி பெரும் அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் அது தனது குரல் அல்ல என பொன்னையன் மறுப்பு தெரிவித்த போதிலும், அந்த குரல் பொன்னையன்தான் என அவருடன் பேசிய கோலப்பனும் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

எடப்பாடி சாதாரண நபர் இல்லை
இந்நிலையில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பொன்னையன் பேசியவதாவது: அரசியலில் வோட் பாங்க் என்பதற்காக கள் பானத்திற்கு ஒப்புதல் இல்லாமல் இருக்கிறது. உழவர்கள் கையில் தமிழகம் வர வேண்டும். அதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். அவரை பார்த்து சாதாரணமாக குடியானவன் என்று நினைக்கலாம். அப்படி இல்லை.

புள்ளி விவரம் கொட்டும்
ஒரு மணி நேரம் மைக்கை பிடித்து பேசினார் என்றால் புள்ளிவிவரங்கள் இல்லாத பேச்சை அவரது பேச்சில் நீங்கள் கேட்க முடியாது. ஒரு கோடியே 34 லட்சத்து 346 ரூபாய் என இருந்தால் அதை அப்படியே பேப்பர் இல்லாமல் பேசுவார். அவ்வளவு நினைவாற்றல் எடப்பாடி பழனிசாமிக்கு.

ராஜாஜியுடன் பழக்கம்
நாங்கள் இளம் வயதிலேயே ராஜாஜியுடன் பழகி இருக்கிறோம். அளப்பரிய நினைவாற்றல் கொண்டவர். போன் நம்பரை கூட அப்படியே சொல்வார். அதற்கடுத்து ஜெயலலிதாவிற்கு நினைவாற்றல் அதிகம், கண்கூட பார்த்தோம். அவர்கள் இருவரையும் மிஞ்சுகிறவராக நினைவாற்றல் மன்னனாக இருக்கக் கூடியவர் எடப்பாடி பழனிசாமி என பொன்னையன் புகழ்ந்து தள்ளினார். இந்த பேச்சை கேட்ட ர.ர.க்கள் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' என்ற கவுண்டமணியின் சினிமா வசனம் தான் நினைவுக்கு வருகிறது என்று சொல்லி நகர்ந்தனர்.
-
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications