“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை!
சென்னை: பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபி அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் புகார் அளித்த நிலையில், விஜய்க்கு பதில் கொடுத்துள்ளார் பொன்ராஜ். விஜய்யிடம் "நீங்கள் பெண்ணை மதித்து போற்ற கற்றுக்கொள்ளுங்கள், உங்களுக்காக காயம்பட்டு, உயிர்நீத்த இளைஞர்களின் குடும்ப பெண்களிடம் மன்னிப்பு கேளுங்கள்." எனக் கேட்டுக் கொண்டுள்ளார் பொன்ராஜ்.
தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக விஜய் ரசிகைகளும், தவெக பெண் தொண்டர்கள் சிலரும் வெளிப்படுத்திய கருத்தை, மோசமாக சித்தரித்து விபச்சாரிகள் என கடுமையாக விமர்சித்திருந்தார் அரசியல் விமர்சகரான பொன்ராஜ். இவர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமிற்கு உதவியாளராக இருந்தவர்.

பொன்ராஜுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தவெக ஆதரவு பெண்களை மோசமான வார்த்தைகளால் தரக்குறைவாக பேசிய அரசியல் விமர்சகர் பொன்ராஜுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளதோடு டிஜிபி அலுவலகத்திற்கு சென்று நேரிலும் புகார் அளித்துள்ளார்.
விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் திமுகவின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார். திமுக தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். தவெகவைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி திமுக மண்ணைக் கவ்வப்போவது உறுதி உறுதி உறுதி" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், விஜய்க்கு பதில் கொடுக்கும் வகையில் பொன்ராஜ் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "நடிகர் விஜய் அவர்களே! ஆதாய சூதாடி நீங்களா? நானா?
உங்களை தலைவன் என்று நேசிக்கிற பெண்களில் சில பேர் ஊடகங்களில் தரம் தாழ்ந்து :
1) அக்காவா இருப்போம், தங்கச்சியா இருப்போம், விஜய்க்கு பெண்டாட்டியா கூட இருப்போம் என்று பொது வெளியில் பேசியதை கண்டித்து திருத்தாமல் அதை ரசித்துக்கொண்டிருந்த நீங்கள் ஆதாய அரசியல் சூதாடியா, நானா?
2) எனக்கு என்புருஷனை விட விஜய்தான் பிடிக்கும் என்ற பெண்மணியை கண்டித்து திருத்தாமல், ரசித்து கொண்டிருந்த நீங்கள் அரசியல் ஆதாய சூதாடியா, நானா?
3) குப்பை கூட்டுறவ கூட நாலு புருஷன் வச்சிருக்கான்னு ஒரு மாணவி பேசி பின்னர் செயலுக்கு வருத்தம் தெரிவித்தாரே - அதை கூட ரசித்துக்கொண்டிருந்த நீங்கள் அரசியல் ஆதாய சூதாடியா, நானா?
4) உங்களை அரசியல் ரீதியாக நான் செய்யும் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல், எதற்கெடுத்தாலும் திமுக பின்னால் இறுக்கிறது என்று திமுக போபியா பிடித்து, எதைச் சொன்னால் பித்தம் தெளியும் என்று அலையும் நீங்கள் அரசியல் ஆதாய சூதாடியா, நானா?
5) இன்று காலையில் இருந்து இப்போது வரை நூற்றூக்கணக்கான மிரட்டல் கால்கள், சமூக வளைத்தளத்தில், வாட்ஸ்ஆப்பில் என்னையும், என் குடும்பத்தையும் இழிவாக, தரக்குறைவாக பேசி திட்டுவதற்கு தான் விர்ச்சுவல் வாரியர்களை உருவாக்கி வைத்திருக்கிறீர்களா? என்ன ஒரு இழி நிலைக்கு இறங்கி இருக்கிறீர்கள்.
அரசியலில் நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வக்கு இல்லை என்றால் இப்படியா வசை பாடுவது?
நான் பெண்களை எப்போதும் கண் போல போற்றுபவன், உங்களை போல் வீட்டில், சினிமாவில், உங்கள் கட்சியில் பெண்களை அவமரியாதையாக நடத்திவிட்டு, அரசியலில் பெண்ணை போற்றுபவன் போல் நடிப்பவன் அல்ல.
எந்தப் பெண்ணையும் அது உங்கள் ரசிகையாக இருந்தாலும் இழிவுபடுத்தும் நோக்கம் எனக்கு இல்லை.
ஆனால், பொது வெளியில் காலாச்சார சீர்கேட்டை உருவாக்கும் சில நாதாரிகள் பெண்களாக, உங்கள் ரசிகர்களாக இருந்தாலும், I will call spade as spade.
எனவே எனக்கு பாடம் எடுக்கும் முன்பு, நீங்கள் பெண்ணை மதித்து போற்ற கற்றுக்கொள்ளுங்கள், உங்களுக்காக காயம்பட்டு, உயிர்நீத்த இளைஞர்களின் குடும்ப பெண்களிடம் மன்னிப்பு கேளுங்கள்.
உங்கள் கட்சி பெண்களுக்கு உங்கள் கட்சி ஆட்களால் இழைக்கப்படும் பாலியல் பலாத்காத்திற்கு ஆளாக்கப்பட்டு பேட்டி கொடுத்த பெண்களிடம் மன்னிப்பு கேளுங்கள்.
உங்களை பார்க்க வந்து காரை மறித்து நியாம் கேட்ட உங்க கட்சிக்காரப் பெண்ணை உங்கள் காரில் இடித்து தள்ளி விட்டு சென்றதிற்கு மன்னிப்பு கேளுங்கள். இதை முதலில் நீங்கள் செய்தால், நானும் என் சொல்லால் காயம் பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கேட்கிறேன்.
மீண்டும் சொல்கிறேன், நான் எந்த பெண்ணையும் பொதுவாக அவதூறு சொல்லவில்லை, அப்படி சொல்லவும் மாட்டேன். எனவே தொடர்ந்து அலைபேசி மிரட்டல் தொடர்ந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்." எனத் தெரிவித்துள்ளார்.
-
ரோடு ஷோவை கடைசி நேரத்தில் ரத்து செய்துவிட்டு கோவை திரும்பிய விஜய்.. தவெக தொண்டர்கள் கடும் ஏமாற்றம் -
சைக்கிள் ஓட்டறதெல்லாம் ஓ.கே.. வாயை திறந்து பேசுங்க விஜய்.. அண்ணாமலை அட்வைஸ் -
ஒரு நாள் ரெஸ்ட், ஒரு நாள் பிரசாரம்.. திருப்பூரில் நாளை ரோடு ஷோ.. விஜய் வைத்திருக்கும் சர்ப்ரைஸ்! -
பெரம்பூரில் விஜயின் வெற்றிக்கு சிக்கல்.. தவெக சின்னம் விசிலா? கேமராவா? குழப்பிவிடும் தமிழக வாழ்வுரிமை கட்சி -
"அனல் பறக்கும் களம்.. ஆளை காணோம் விஜய்!" டூப் முதல் ஹாலோகிராம் வரை.. தவெகவின் 'சமாளிப்பு' அரசியல்! -
“பிரச்சாரம் ரத்து என்பதில் உண்மை இல்லை.. விஜய் 24 மணி நேரமும் களத்திற்கு ரெடி” - CTR நிர்மல் குமார் -
இந்த 2ல் ஒன்று நடந்தால்.. போச்சு.. விஜய் வைக்க போகும் செக் யாருக்கு? யோசிக்க முடியாத கோணமா இருக்கே? -
ரொக்கமாக சம்பளம் வாங்கி.. வரி கட்டாமல் மறைத்த விஜய்.. வருமான வரித்துறை கேஸ்.. விஜய் மேல்முறையீடு -
கன்னியாகுமரியில் அதிமுக - பாஜக கூட்டணி வாக்குகளை விஜய் கைப்பற்றுகிறார்.. பத்திரிகையாளர் சுவாமிநாதன்! -
ஜனநாயகன் படம் ஹைதராபாத் ஸ்டுடியோவில் கசிந்ததா.. எடிட்டர் சங்கம் அளித்த விளக்கம் -
விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.. நெசவாளர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு.. திருப்பூரில் விஜய் வாக்குறுதிகள் -
கன்னியாகுமரியில் விஜய் ஓட்டிய சைக்கிள்… விலை இவ்வளவு தானா? அதை வாங்கும் போது நடந்த சம்பவம்












Click it and Unblock the Notifications